குழந்தையுடன் ரயில் முன் பாயந்த பரபரப்பை ஏற்படுத்திய தாய்!

திருவாரூர் அருகே 3 வயது குழந்தையுடன் பெண் தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


திருவாரூர் மாவட்டம் கோக்கரையைச் சேர்ந்த கோமதி என்பவர் தனது கணவர் செல்வம் மற்றும் நாகஸ்ரீ, நவிஸ்ரீ ஆகிய இரு குழந்தைகளுடனும் வசித்து வந்தனர். இந்நிலையில் கோமதி தன்னுடைய கணவனுடன் தகராறு ஏற்பட்டு, மனமுடைந்த நிலையில் தற்கொலை செய்ய முடிவெடுத்தார்.

இதனையடுத்து இன்று அதிகாலை 4 மணிக்கு, தனது 3 வயது மகளான நவிஸ்ரீயுடன் கேக்கரை ரயில் தண்டவாளம் பகுதிக்குச் சென்று, சென்னையிலிருந்து மன்னார்குடி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலின் முன் பாய்ந்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே தாயும் குழந்தையும் உயிரிழந்தனர்.

இதன் பின்பு திருவாரூர் ரயில்வே போலீஸார், 2 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் மருத்துவ கல்லூரிக்கு அனுப்பிவைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். 3 வயது குழந்தையுடன் தாய் ரயில் முன் பாய்ந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.