என் கர்ப்பிணி நடிப்பிற்கு காரணம் என் அம்மாவே – அக்ஷரா ஹாசன்!!
தான் கர்ப்பிணியாக நடிப்பதற்கு தன் அம்மாவே காரணம் என நடிகை அக்ஷரா ஹாசன் தெரிவித்துள்ளார்.
நடிகர் கமலஹாசனின் இரண்டாவது மகள் அக்ஷரா ஹாசன். கமலின் தயாரிப்பில் விக்ரமுடன் கடாரம் கொண்டான் படத்தில் கர்ப்பிணியாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் நேற்று வெளியாகியிருந்தது.
இந்த படத்தில் கர்ப்பிணியாக நடித்திருப்பது குறித்து நடிகை அக்ஷரா அளித்திருக்கும் பேட்டியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், “கடாரம் கொண்டான் படத்தில் எனக்கு அளிக்கப்பட்டிருக்கும் கதாபாத்திரம் மிகவும் முக்கியமானது. எப்போதும் புதுமையையும் சவாலையும் விரும்பும் நான், இந்த கதாபாத்திரம் கிடைத்ததும் மிகவும் சந்தோஷப்பட்டேன். அதே நேரம், கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் உணர்ந்து ஒவ்வொரு காட்சியிலும் கவனமெடுத்து நடித்திருக்கிறேன்.
கர்ப்பிணி வேடம் என்பதால், ஒவ்வொரு அசைவிலும் மிகவும் சிரமப்பட்டேன். இருந்தாலும் அது எனக்கு சுகமாகவே இருந்தது. கர்ப்பிணி கதாபாத்திரம் என்றதும் அதில் எப்படி நடிக்க வேண்டும் என என்னுடைய அம்மாவிடம் யோசனை கேட்டேன். அவர் கூறியவாறே நடித்தேன். என் அம்மா கொடுத்த உற்சாகத்திலேயே, படம் முழுவதும் நடித்திருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை