ஸ்டாலின் ஆட்சியை மலரவைப்பதே இலக்கு!

தமிழகத்தில் ஸ்டாலின் ஆட்சியை மலரவைப்பதே இளைஞரணியின் இலக்கு என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


திமுகவின் இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் கடந்த 4ஆம் தேதி நியமனம் செய்யப்பட்டார். பொறுப்பேற்ற சில நாட்களில் இரு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்களை மாற்றி அதிரடி காட்டியிருந்தார். இளைஞரணி செயலாளராக உதயநிதி நியமிக்கப்பட்டது வாரிசு அரசியல் என்று சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், இதற்குத் தனது செயல்பாடுகள் மூலமாகப் பதிலளிப்பேன் என்று உதயநிதி பதிலளித்தார்.
இந்த நிலையில் 20-07-1980 அன்று தொடங்கப்பட்ட திமுக இளைஞரணி நேற்று (ஜூலை 20) 40 வயதை தொட்டது. இந்த நாளில் திமுக இளைஞரணிச் செயலாளரான உதயநிதியின் முதல் அறிக்கையும் வெளியாகியிருக்கிறது.
உதயநிதியின் அறிக்கையில், திமுகவின் இதயமாகச் சொல்லப்படும் இளைஞரணி நாற்பதாவது ஆண்டை இளைஞரணி தொடும்போது, அதனுடைய செயலாளர் பொறுப்பைச் சுமக்கும் கடமை, எனக்குக் கிடைத்திருப்பதை நினைத்து, ஒருபக்கம் பெருமைப்படுவதாகவும், இன்னொருபக்கம் மலைப்பாகவும் இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
“திமுக இளைஞர்களுக்காக இளைஞர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம். 1949ஆம் ஆண்டு திமுக தொடங்கப்பட்டபோது, அண்ணாவின் வயது 40. கலைஞரின் வயது 25. பேராசிரியர் அவர்களுக்கு அப்போது வயது 27. இப்படி ஒவ்வொரு முன்னணியினரையும் வரிசைப்படுத்த முடியும். அதனால் தான், இளைஞர்களால் உருவாக்கப்பட்ட இளைஞர் இயக்கம் என்கிறேன்” என்று அறிக்கையில் தெரிவித்துள்ள அவர், இந்த இளைஞர் சக்திதான், கொட்டும் மழையில் உருவான இயக்கத்தை நாடு முழுவதும் வளர்த்து அசைக்க முடியாத ஆலமரமாகக் காட்சியளிக்க வைத்துள்ளது. அதனால்தான், இன்று பலருக்கும் நம் கழகத்தைப் பார்த்தால், வயிற்றெரிச்சல் என்று குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், “பொதுவாழ்வில் ஈடுபடுவோருக்கு விமர்சனங்கள் என்பவை உரம் போன்றவை. மனதை திடப்படுத்துபவை. இந்த விமர்சனங்களுக்கான ஒரே பதில் ‘செயல்’ மட்டுமே என்று ஸ்டாலின் அடிக்கடி சொல்வார்கள். அந்த அடிப்படையில் எங்களது இளைஞரணி தனது அர்ப்பணிப்புடன் கூடிய செயல்பாட்டின் மூலமாக இந்த விமர்சனங்களை எதிர்கொண்டு வெற்றியை நோக்கிச் செல்வோம்” என்று குறிப்பிட்டிருக்கும் உதயநிதி,
40ஆவது ஆண்டில் அடியெடுத்துவைக்கும் இளைஞரணிக்கு இலக்கு, தமிழ்நாட்டில் தலைவர் மு.க.ஸ்டாலினின் ஆட்சியை மலர வைப்பது. அந்த இலக்கை அடைய இரவுபகல் பாராது உழைக்க கிளம்பியிருக்கும் இளம்படையினருக்கு வாழ்த்துகள் என்றும் தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.