தேசிய சிக்கல் கம்யூனிஸ்ட் கொள்கையும்நடைமுறையும்!!

முதலாளிய தேசிய இயக்கங்கள் அல்லது முதலாளிய வா்க்கத்தின் தலைமையிலான தேசிய இயக்கங்கள் இன்று வரை பல்வேறு நாடுகளில் தொடர்கின்றன.

அவை குறிப்பான தனிநாட்டு கோரிக்கை, ஆக்கிரமிப்பு எதிர்ப்பு போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்நிறுத்தி ஆயுதப் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் போராடி வருகின்றன.



இவற்றில் பல ஆளும் வா்க்கங்களுடன்
சமரசம் செய்து கொண்டு மக்களுக்கு துரோகமிழைத்துள்ளன.

அதே சமயம், இன்னும் பல இயக்கங்கள்
இன்று வரை உறுதியாகப் போராடி வருகின்றன.

இவ்வியக்கங்களில் பல ஒடுக்கப்பட்ட
தேசிய இனங்களின் பெரும் ஆதரவைப் பெற்றுள்ளன.

இருப்பினும், இந்த இயக்கங்கள்
ஏகாதிபத்திய ஆதிக்கத்திலிருந்து
விடுதலை பெறுவது என்ற இலட்சியத்தை உணா்வுப்பூா்வமாக முன் வைப்பதில்லை.

இது இன்றைய ஏகாதிபத்திய சகாப்தத்தில் முதலாளிய வா்க்கத்தின் நிலையை நமக்கு விளக்குகிறது.

 ஏகாதிபத்தியத்திடமிருந்து விடுதலை பெறாமல் தனிநாடு அடையப்பட்டாலும், ஆக்கிரமிப்பாளா்கள் விரட்டியடிக்கப்பட்டாலும் அதை நாம் தேசிய விடுதலை என்று கூறமுடியாது.

சில தேசிய இனங்கள் தனியரசு
அமைத்தாலும் கூட, ஒன்று அவா்கள்
ஏகாதிபத்திய சுரண்டலை ஒழித்து
விடுதலை பெற வேண்டும். அல்லது அவா்கள் ஏகாதிபத்தியத்திடம் சரணடைய
வேண்டும். இது தவிர வேறுவழியில்லை.

இவ்வுண்மையை நாம் எப்போதும்
நினைவில் கொள்ள வேண்டும்.
ஏகாதிபத்திய எதிர்ப்பற்ற, ஏகாதிபத்திய ஆதிக்கத்தை ஒழிக்காத தேசிய விடுதலை மாயையே தவிர வேறில்லை.

மறுபுறம், இன்றைய சூழலில்
ஏகாதிபத்தியங்களே கூட தமக்கு
சாதகமாக இருக்கும் எனில், புதிய
தனி நாடுகளை உருவாக்குகின்றனா்.

சமீப வருடங்களில் கிழக்கு தைமூா்,
கொசாவா போன்ற புதிய நாடுகளை ஏகாதிபத்தியங்கள் உருவாக்கியுள்ளன
என்ற விசயம், இவ்வுண்மையை மேலும் தெளிவாக்குகிறது.

 அடுத்ததாக, ஹியூகோ சேவஸ் தலைமையிலான வெனிசுலா மற்றும்
அந்நாட்டின் தலைமையில் தென்னாப்பிரிக்காவின் சில நாடுகள் அமைந்துள்ள அமெரிக்க எதிர்ப்புக் கூட்டணி ஆகியவை இன்று ஏகாதிபத்தியத்திற்கு மாற்றானதாக சில அறிவுஜீவிகளால் பரிந்துரைக்கப்படுகின்றன.

ஹியூகோ சேவஸின் பொருளியல் கொள்கை ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசிய விடுதலை என இவா்களால் புகழப்படுகிறது.

ஹியூகோ சேவஸ் மற்றும் இதர ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள் என்றழைக்கப்படுகிறவா்களின் திட்டங்கள், ஏகாதிபத்திய சுரண்டலை ஒழிப்பதாக இல்லை.

மாறாக,  ஏகாதிபத்திய சுரண்டல்
அமைப்பிற்குள் இருந்து கொண்டே,
“அமெரிக்க எதிர்ப்பு” “சனநாயக
சீர்திருத்தங்கள்” என்பதே அவா்களின் செயல்பாடாக உள்ளது.

முற்று முழுதான ஏகாதிபத்திய ஆதிக்க
ஒழிப்பு இல்லாத “தேசிய விடுதலை” என்பது பெயரளவிலானதுதானே தவிர வேறல்ல.

இக்கண்ணோட்டத்திலிருந்தே நாம் தென் அமெரிக்க மற்றும் இதர முதலாளிய
மாற்றுக்களை பார்க்க வேண்டும்.

4. #நாம்_முதலாளிய_தலைமையிலான
#தேசிய_விடுதலை_போராட்டங்களை
#ஆதரிக்கலாமா?
 இன்றைய கட்டத்தில் முதலாளிகள் தலைமையிலான தேசிய விடுதலைப் போராட்டங்கள் புறநிலையில் உணர்வூப்
பூர்வமாக ஏகாதிபத்திய எதிர்ப்பை முன்வைப்பதில்லை.

இருப்பினும், நடைமுறையில் அவை
ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டமாகவே
உள்ளன.

அவை ஏகாதிபத்தியத்தையும்,
அரைக் காலனிய தரகு ஆளும்
வர்க்கங்களையும் பலவீனப்படுத்துகின்றன.

ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்ட உணர்வை வளர்க்கின்றன.

அது அவ்வாறு உள்ள வரை நாம் அவற்றை ஆதரிப்போம்.

 மறுபுறம், நாம் தேசிய விடுதலை பற்றிய
நமது திட்டத்தை வைத்து மக்களிடம்
பிரச்சாரம் செய்ய வேண்டும்.

மக்களுக்கு சரியான கண்ணோட்டத்தை
வழங்க நாம் முயற்சிக்க வேண்டும்.

ஆனால், முதலாளிய தலைமை ஏகாதிபத்திய எதிர்ப்பை வைக்கவில்லை என்பதற்காக, அப்போராட்டங்களை நாம் ஆதரிக்காவிடில்,
அது பெருந்தேசியவாதம், ஒடுக்குமுறை
மற்றும் ஏகாதிபத்தியங்களுக்கு
ஆதரவானதாகவே இருக்கும்.

ஆதலால் முதலாளி வர்க்கம் தலைமையிலான ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் தேசிய இயக்கங்களை நாம் எவ்வித நிபந்தனையுமின்றி ஆதரிக்க வேண்டும்.

அது மட்டுமின்றி, அத்தேசிய இனத்திலிருக்கும் பாட்டாளி வா்க்கம் அப்போராட்டத்தை
தலைமை தாங்குவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க வேண்டும்.

5. #தனிநாடு_கோரிக்கையை_அனைத்து
#_சூழல்களிலும்_நாம்_ஆதரிப்போமா?
 நாம் அடிப்படையில் தேசிய விடுதலை,
இன சமத்துவம், சுயநிர்ணய உரிமை
ஆகியவற்றை எப்போதும்
உயர்த்திப் பிடிக்கிறோம்.

ஆனால், ஒரு தேசிய இனத்தின் குறிப்பான தனிநாட்டு கோரிக்கையை பொறுத்தவரை,
அது பாட்டாளி வர்க்கப் புரட்சியின்
நலன்களுக்கு உகந்ததாக இருக்கும்போது
தான் ஆதரிப்போம்.

வேறு வார்த்தையில் சொன்னால், அது பாட்டாளி வா்க்கப் புரட்சியின் நலன்களுக்கு எதிராக இருந்தால், ஆதரிக்க மாட்டோம்.

ஆனால், ஒரு தேசிய இன மக்கள் பிரிந்து
செல்ல விரும்பி, அது புரட்சியின் நலனுக்கு
எதிராக இருக்குமேயானால், சோ்ந்திருப்பது சரியானது என அவா்களுக்கு
அறிவுறுத்துவோம்.

அம்மக்களுக்கு புரிய வைக்க முயற்சி
செய்வோம். அதற்கான பிரச்சாரத்தையும் மேற்கொள்வோம். ஆனால் அத்தேசிய இனம் பிரிந்து செல்வதை எதிர்க்க மாட்டோம்.

 புரட்சியின் முன்னேற்றத்தின் போது,
அதை தடுக்க ஆளும் வா்க்கங்கள்
தேசியவாதத்தை ஊட்டி பிரிவினையை ஊக்குவிக்கலாம்.

அச்சமயத்தில் எல்லா தேசிய இனங்களும் இணைந்து போராடும் போது, ஒற்றுமையை குலைக்க செய்யப்படும் சதியை,
ஆளும் வா்க்க சதியை, அத்தேசிய
இனத்திடம் விளக்கி, ஐக்கியத்திற்கான
அவசியம் குறித்தும் புரட்சியின் நலன்
குறித்தும் விளக்க வேண்டும்.

அதையும் மீறி மக்கள் பிரிந்து போக
விரும்பினால், அதை தடுக்கவே கூடாது.

ஏனெனில், தேசிய இனம் பிரிந்து போவதா இல்லையா என்பதை அத்தேசிய இனம் தான் தீர்மானிக்க வேண்டும்.

VIII. #கட்சி_அமைப்பும்_தேசிய_சிக்கலும்

1. #ஒரு_கம்யூனிஸ்ட்_கட்சியின்_பரப்பெல்லை
#territoriality_பகுதியை_தீா்மானிப்பது_எது?

 ஒரு கம்யூனிஸ்ட் கட்சி பல்வேறு தேசிய இனங்களைச் சார்ந்த தொழிலாளி வா்க்கத்தினரிடையே உள்ள ஒட்டுறவு அடிப்படையில் நிறுவப்படுகிறது.

நாம் அத்தகைய உறவுகள் பற்றி
குறிப்பிடுகையில் மற்ற அம்சங்களுடன் கூட, தொழிலாளி வா்க்கத்தின் வரலாற்று
ரீதியான உருவாக்கத்தையும், அதன் ஓருங்கிணைந்த போராட்ட
பாரம்பரியத்தையும் தான்
பொருள்படுத்துகிறோம்.

இது குறிப்பானதொரு கம்யூனிஸ்ட்
கட்சியின் பரப்பெல்லை பகுதியை தீா்மானிக்கிறது.

2. #கம்யூனிஸ்ட்_கட்சியின்_கட்டமைப்பு
#எவ்வாறு_இருக்க_வேண்டும்
#கூட்டமைப்பு_தன்மையிலா?
#அல்லது_ஒருமைப்பட்ட_தன்மையிலா?

 கம்யூனிஸ்ட் கட்சி ஒருபோதும்
கூட்டமைப்பு தன்மை கொண்ட
கட்டமைப்பை விரும்பி
ஏற்றுக்கொள்வதில்லை.

அது ஒரு பல்தேசிய சமூகம் அல்லது அரசில் (பல்தேசிய யதார்த்தத்திற்கு ஏற்ப அரசு
கூட்டரசு அடிப்படையில் இருக்கலாம்)
வாழ்கிறது என்ற காரணத்திற்காக,
அத்தகைய முறையை கம்யூனிஸ்ட் கட்சி ஏற்பதில்லை.

 தொழிலாளி வா்க்கம் அதற்குள் முரண்பாடு எதையும் கொண்டிருப்பதில்லை.

தேசம் எதுவாயினும் பாட்டாளி வா்க்கம் பொதுவானதொரு வாழ்க்கை முறையை கொண்டிருக்கிறது.

இந்த புறநிலை யதார்த்தம் சனநாயக மத்தியத்துவத்தின் அடிப்படையில்
ஒருங்கிணைந்த கட்சியை உருவாக்குதற்கான தேவையை தோற்றுவிக்கிறது.

ஒரு கூட்டமைப்பு தன்மையிலான கட்டமைப்பு எப்போதும் அடிப்படை வேறுபாடுகளுக்கு இடம் தருவதுடன், அவற்றை உறுதிப்படுத்துகிறது.

அத்துடன் அது சனநாயக – மத்தியத்துவத்திற்கு எதிராகவும், பாட்டாளி வா்க்க கருத்தியலுக்கும் செயலுக்கும் எதிராகவும் உள்ளது.

 “அக்டோபா் புரட்சிக்குப் பிறகு, 1919-ல் நடைபெற்ற கட்சி பேராய தீர்மானத்தில் தனி உக்ரேன், லாத்வியா, லிதுவேனியா மற்றும் வெள்ளை ரசிய குடியரசுகள் ஆகியவற்றை அங்கீகரிப்பதானது,

“கூட்டமைப்பு என்ற அடிப்படையில்” கூட தனித்தனியாக கம்யூனிஸ்ட் கட்சிகள்
நீடிப்பதற்கு எந்த அடிப்படையையும் வழங்கவில்லை என்று தெளிவாக
கூறப்பட்டுள்ளது.

மேலும், உக்ரேனிய, லெட்டிஷ், லிதுவேனிய கம்யூனிஸ்டுகளின் மையக்குழுக்கள் ரசிய கம்யூனிஸ்ட் கட்சியின் மண்டலக் குழுக்களின் உரிமையைப் பெற்றுள்ளன.

அவை ரசிய கம்யூனிஸ்ட் கட்சியின் மையக் குழுவுக்கு முழுமையாகக் கீழ்ப்பட்டவை ஆகும் என்பதை அத்தீர்மானம் தெளிவாக விளக்குகிறது” என்று லெனின் சரியாக சுட்டிக் காட்டினார்.

(போல்ஷ்விக் புரட்சி என்ற நூலில் ஈ.ஹெச். கார்
குறிப்பிட்டுள்ளது)

3. #கம்யூனிஸ்ட்__கட்சி_கூட_பகுதிப்பிரிவினை #அடிப்படையில்_பிளவுபட_வேண்டுமா?

        முதலாளி வா்க்கத்திற்கு எதிரான ஒருங்கிணைந்த போராட்டத்தின் பகுதியாக ஐக்கியம் அடைந்திருக்கின்ற கம்யூனிஸ்ட் கட்சி,

 1. தனி அரசுகளின் உருவாக்கம்
 2. இரு வேறுபட்ட அமைப்பு முறைகள்
நிலவுதல் போன்ற காரணங்களுக்காக
பிளவுபட்ட வேண்டியதில்லை.

 கம்யூனிஸ்ட் கட்சி சனநாயக மத்தியத்துவத்தின் அடிப்படையில்
ஒன்றிணைந்து இருப்பதற்கு கடுமையாக முயற்சிக்க வேண்டும்.

தனியொரு ஒருங்கிணைந்த கட்சியின் கீழ்
வா்க்கப் போராட்டத்தை தொடர்ந்து நடத்த
சாத்தியமில்லாததாகிற நிலைமையின் கீழ் மட்டுமே,
அவற்றின் பிரிவினை நிகழலாம்.

 லெனின் கூறினார், “மொழி பிரச்சனை குறித்தும்
இதையொத்த பிற பிரச்சனைகள் குறித்தும் பல்வேறு
பூா்ஷ்வா கட்சிகள் நடத்தும் தேசியவாத சச்சரவுகளுக்கு
எதிராகத்
தொழிலாளி வா்க்க சனநாயகம்
என்ன கோருகிறது என்றால்,

எந்தவிதமான பூா்ஷ்வா தேசியவாதத்துக்கும் நோ்மாறான முறையில் எல்லாத் தேசிய இனங்களையும் சோ்ந்த தொழிலாளா்களும் எல்லாத் தொழிலாளி வா்க்க
நிறுவனங்களிலும் (தொழிற்சங்கங்களிலும் கூட்டுறவுக் கழகங்களிலும் நுகா்வாளா் சங்கங்களிலும்
கல்விக்கழகங்களிலும் ஏனைய எல்லாவற்றிலும்) நிபந்தனையின்றி ஐக்கியமடையவும் ஒருங்கிணையவும் வேண்டும்.

இம்மாதிரியான ஐக்கியத்தாலும் ஒருங்கிணைவாலும் மட்டுமே சனநாயகத்துக்காக முனைந்து நின்று பாடுபட முடியும்,
மூலதனத்துக்கு எதிராய் (மூலதனம்
ஏற்கனவே சா்வதேசியத் தன்மையதாகியுள்ளது, மேலும்
மேலும் ஆகி வருகிறது)
தொழிலாளா்களது நலன்களைப்
பாதுகாத்து நிற்க முடியும், எல்லாத் தனியுரிமைகளுக்கும்
எல்லாச் சுரண்டலுக்கும் அன்னியமான புதிய வாழ்க்கை
முறையை நோக்கி மனித குலம் வளா்ச்சியுறுவதற்காகப்
போராட முடியும்”               

 ( தேசிய இனப் பிரச்சனைகளும் பாட்டாளி வா்க்க சா்வதேசியவாதமும் – லெனின், முன்னேற்றப் பதிப்பகம் 1987, பக்கம் 24)

4. #ஒரு_கம்யூனிஸ்ட்_கட்சி_பல்தேசிய
#சமூகத்தில்_ஒரு_குறிப்பிட்ட_தேசத்தின் #பிரிவினைக்கான_கோரிக்கையை #முன்வைக்கும்போது_கூட_அது_ஒன்றுபட்டு #இருக்க_வேண்டுமா?

 தேசிய இனங்களில் ஒன்றின் பிரிவினையைக் கட்சி கோருகிறது என்றால் கூட, ஓா் ஒன்றுபட்ட, மையப்படுத்தப்பட்ட கட்சி நீடிக்கலாம்.

எடுத்துக்காட்டாக, ஜம்மு – காஷ்மீா் இந்தியாவிலிருந்து பிரிந்து போவதற்கான உரிமையை கோருகிறது என்பதாலேயே,
அங்கு தனியொரு கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்க வேண்டிய தேவை இல்லை.

ஏனெனில், கட்சிக்குள் இச்சிக்கல் மீதான நிலைபாட்டில் முரண்பாடு எதுவும் இல்லை.

எனவே குறிப்பிட்ட தேசிய இனத்தின் பிரிவினைக்கான
கோரிக்கை மையப்படுத்தப்பட்ட கட்சியின் இருத்தலோடு முரண்பட வேண்டியதில்லை.

5. #பல்தேசிய_சமூகத்தில்
#மையப்படுத்தப்பட்ட_கட்சி_கட்டமைப்பு
#எவ்வாறு_கட்டப்பட_வேண்டும்?

 சனநாயக மத்தியத்துவ அடிப்படையில் மையப்படுத்தப்பட்ட ஒரு கட்சி, கூட்டமைப்பு வகைப்பட்ட கட்டமைப்பை பின்பற்றுவதன்
மூலம் அல்லாமல், அமைப்புத்துறைக்குரிய
சில தகவமைப்புகளை மேற்கொள்வதன்
மூலம் பல்தேசிய சூழலை கணக்கில் கொள்ள
வேண்டும்.

 முதலாவதாக, கட்சி ஒரு முரண்பாடற்ற பாட்டாளி
வா்க்க சா்வதேச நிலைபாட்டைக் கொண்டிருக்க வேண்டும்,
தேசிய ஒடுக்குமுறையை எதிர்த்து தேசிய சுயநிர்ணய உரிமைக்காக போராடுவதில் சரியான அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும்.

 இரண்டாவதாக, நாட்டின் பல்தேசிய பண்பை பிரதிபலிக்கின்ற வகையில் கட்சி உறுப்பினா் நிலை இருக்குமாறு செய்ய கடும் முயற்சி செய்ய வேண்டும்.

 மூன்றாவதாக, கட்சி, தான் பணியாற்றிக் கொண்டிருக்கிற
தேசிய இனத்தில் வோ்விட வேண்டும்.

அங்கே வாழும் பிற தேச மக்களை புறக்கணிப்பதன்
மூலம், தன்னை ஒரு
குறிப்பிட்ட தேசிய இனத்துடன் குறுக்கிக் கொள்ள
வேண்டும் என்பதல்ல இதன் பொருள்.

6. #ஒரு_பல்தேசிய_நாட்டில்_ஒரு
#குறிப்பிட்ட_தேசிய_இனத்திற்கு
#முதன்மை_ரண்பாடு_மாறுமா?

 அரை நிலவுடமை, அரை காலனிய நிலைமைகளின்
கீழ் உள்ள ஒரு பல்தேசிய
நாட்டில், நிலவுடமையுடனான முரண்பாடு முதன்மை முரண்பாடாக உள்ள போது, பல்வேறு காரணிகளின்
பரஸ்பர செயல்பாட்டால், அந்த தேசிய இனத்தின்
முக்கிய கோரிக்கையாக பிரிவினைக்கான
கோரிக்கை மாறும் சாத்தியப்பாடு உள்ளது.

பிரிவினைக்கான கோரிக்கை முன்னிலைக்கு
வருகிறபோது, நாட்டின் பிற பகுதிகளுக்கான முதன்மை முரண்பாடு மாறாமல் நீடிக்கும். அதே சமயத்தில்
குறிப்பிட்ட அத்தேசிய இனத்தின் முதன்மை
முரண்பாடு மாற்றத்திற்கு உள்ளாகும்.

கம்யூனிஸ்ட் கட்சி இம்மாற்றத்தை அங்கீகரிக்க வேண்டும். அதனடிப்படையில் பொருத்தமான செயல்உத்தி
நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

 குறிப்பிட்ட ஒரு தேசிய இனத்தின் முதன்மை முரண்பாட்டில் ஏற்படும் இத்தகைய மாற்றம் பல்வேறு காரணிகளை சார்ந்திருக்கின்றது.

நாட்டின் பல்தேசிய பண்பு, ஒரு தேசிய இனத்திற்கும்
மற்றதிற்கும் இடையே வளா்ச்சி மட்டங்களிலுள்ள
ஏற்ற தாழ்வு, குறிப்பான தேசிய இனம் குறித்த ஆளும் வா்க்கங்களின் அணுகுமுறை, அரசியல் கட்சிகளின்
பாத்திரம், செல்வாக்கு, தேசிய சுயநிர்ணய உரிமைக்கான
போராட்டத்தில் மக்கள் திரளின் அணிதிரட்சி மற்றும்
பங்கேற்பு, பாட்டாளி வா்க்கம் உள்ளிட்ட மக்கள், பிரிவினைக் கோரிக்கையை எப்படி அணுகுகிறார்கள் போன்றவற்றை சார்ந்திருக்கின்றது.

ஆனால், ஒருவா் பிரிவினைக்கான கோரிக்கை
முன்னுக்கு வந்திருக்கிறது என்றும், அது முதன்மை
முரண்பாடாக உள்ளது என்றும் ஏற்றுக்கொள்கிறார்
என்பதற்காக, பிரிவினை கோரிக்கை நிறைவேற்றப்படும்
வரை மீண்டும் முதன்மை முரண்பாடு முந்தைய நிலைக்கு
மாறாது என கருத வேண்டிய அவசியமில்லை.

மீண்டும் ஒட்டு மொத்த காரணிகளும் இம்மாற்றத்தை
நோக்கி போக உதவக்கூடும்.

 குறிப்பிட்ட ஒரு தேசிய இனத்தில் முதன்மை
முரண்பாட்டில் ஏற்படும் மாற்றம், கம்யூனிஸ்ட்
கட்சி பின்பற்றும் செயலுத்திகளில் பொருத்தமான
மாற்றங்களை செய்யுமாறு கோருகிறது.

அந்த குறிப்பான தேசிய இனத்திற்கான செயல்உத்தியில்
மாற்றம் ஏற்பட்டுள்ளதால், புரட்சியின் கட்டம், மூலஉத்தி ஆகியவை மாற்றப்பட வேண்டும் என்பது இதன் பொருளல்ல.

 எனவே, ஒரு பல்தேசிய நாட்டில் அரை காலனிய – அரை நிலவுடமை நிலைமைகளின் கீழ் முரண்பாடுகள் குறித்த பகுப்பாய்வும், அதன் அடிப்படையில் வகுக்கப்படுகிற மூலஉத்தியும், செயல்உத்திகளும், அத்தகைய நிகழ்வுக்குரிய வாய்ப்புகளுடன் ஒட்டுமொத்தமாக முரண்படாத வகையில் முரண்பாடுகளை வகைப்படுத்துவதை இன்றியமையாததாக்குகின்றன.

மேலும், அத்தகைய மாறிய சூழ்நிலைகளில் தேவையான செயல்உத்தி நடவடிக்கைகளை உள்ளடக்கியிருப்பதோடு, அவற்றை
வகுத்தளிக்க உதவும் வகையில் முரண்பாடுகள்
வகைப்படுத்தப்பட வேண்டும்.

நாட்டின் பிற பகுதிகளில் முதன்மை
முரண்பாடு மாறாத போது கூட,
ஒரு குறிப்பிட்ட தேசிய இனத்தின்
முதன்மை முரண்பாட்டில் ஏற்படும்
இந்த மாற்றத்திற்கு
ஏற்ப செயல்படும் வகையில்
இவ்வகைப்பாடு உருவாக்கப்பட
வேண்டும்.

                            

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.