நிரவ் மோடியின் பிணை மனு விசாரணைக்கு வருகின்றது!
இந்திய வர்த்தகர் நிரவ் மோடியின் பிணை மனு இன்று(வியாழக்கிழமை) லண்டன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
மும்பையை சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் பெற்ற 13,000 கோடி ரூபாய் கடனை திருப்பிச் செலுத்தாமல் வெளிநாடு தப்பிச் சென்றார்.
லண்டனில் தலைமறைவாக இருந்த அவர், கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
வாண்ட்ஸ் வோர்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், பிணை கோரி 3 முறை தாக்கல் செய்த மனுவையும் லண்டன் நீதிமன்றம் நிராகரித்தது.
இதற்கிடையில் நிரவ் மோடியை இந்தியாவிற்கு அழைத்து வருவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நிரவ் மோடியின் வழக்கு தொடர்பான ஆவணங்களையும் லண்டன் நீதிமன்றத்தில் இந்தியா தாக்கல் செய்தது.
இந்நிலையில் பிணை கோரி லண்டன் நீதிமன்றத்தில் மீண்டும் நிரவ் மோடி மனுத்தாக்கல் செய்துள்ளார். இது தொடர்பான மனு மீதான விசாரணை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை