உயர்தர மாணவன் தூக்கிட்டு தற்கொலை!!

பிட்டிகல பொலிஸ் பிரிவின் பம்பரவான, பட்டஹேன பிரதேசத்தை சேர்ந்த மாணவன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பிட்டிகல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


லஹிரு சம்பத் எனப்படும் 18 வயதான மாணவன் ஒருவரே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அவர் பிரபல பாடசாலை ஒன்றில் உயர்தரம் கற்று வரும் மாணவர் என குறிப்பிடப்படுகின்றது.

குறித்த மாணவர் எழுதி வைத்த கடிதத்திற்கமைய காதல் விரக்தியினால் ஏற்பட்ட மன வருத்தமே இந்த தற்கொலைக்கு காரணம் என தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.