ஹக்கீம், ஹரீசுடன் சாய்ந்தமருது தரப்பு பேச்சுவார்த்தை !!
சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி மன்றம் வழங்குவது தொடர்பான பரஸ்பர கலந்துரையாடல் நேற்று (24) காலை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களில் இல்லத்தில் நடைபெற்றது.
இச்சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவருமான எச்.எம்.எம். ஹரீஸ், கல்முனை மாநகர சபையின் சுயேட்சைக்குழு உறுப்பினர்கள், சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் வை.எம். ஹனீபா, சாய்ந்தமருது முன்னாள் பிரதேச செயலாளரும், அமைச்சின் மேலதிக செயலாளருமான ஏ.எல்.எம். சலீம், கல்முனை மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வர் ஏ.ஏ.வஸீர், மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சாய்ந்தமருது பிரதேச முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.
கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்துக்கு விரைவில் தீர்வுகாண்பதுடன், யாருக்கும் பாதிப்பில்லாத வகையில் ஏககாலத்தில் சபைகள் பிரிக்கப்பட்டு சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி மன்றம் வழங்குவதென இதன்போது கலந்துரையாடப்பட்டது.

.jpeg
)





கருத்துகள் இல்லை