வவுனியாவில் வீடொன்றில் தீ விபத்து!!
வவுனியா பறன்நட்டகல் கிராமத்தில் வீடொன்றில் பற்றிய தீயை நகரசபையின் தீயணைப்பு படையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தற்காலிக வீடொன்றில் அனைவரும் வெளியில் சென்றிருந்த சமயம் நேற்று (புதன்கிழமை) மாலை திடீரென தீ ஏற்பட்டுள்ளது.
தீ பரவுவதை அவதானித்த அயலவர்கள் உடனடியாக தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தபோதிலும் அது சாத்தியப்படாத நிலையில் வவுனியா நகரசபையின் தீயணைப்புப் படையினருக்கு தகவல் வழங்கப்பட்டு அவர்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தினால் வீட்டில் உள்ள உடமைகள் அனைத்தும் அழிவடைந்துள்ள போதிலும் எவரும் வீட்டில் குறித்த நேரத்தில் இல்லாமையினால் உயிராபத்துக்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.
குறித்த வீட்டின் மின்சார இணைப்பு நேற்று மீளப்பெற்றுக்கொள்ளப்பட்டிருந்த நிலையில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளமையினால், மின்சார ஒழுக்கினால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில் ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை