இம்ரான்கான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி எதிர்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் இம்ரான்கான் தலைமையிலான அரசாங்கம் வெற்றி பெற்று ஒரு வருடம் முடிவடைந்துள்ளது.

பிரதமராக பதவியேற்ற இம்ரான்கான் பாகிஸ்தானை சரியாக வழிநடத்தவில்லை என எதிர்கட்சியினர் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சீரழிந்த நிலையிலுள்ள பொருளாதாரத்தை மீட்பதில் இம்ரான்கான் தோல்வி அடைந்துவிட்டதாக குற்றம் சுமத்தி எதிர்க்கட்சிகள் நேற்று(வியாழக்கிழமை) பாகிஸ்தானின் பல்வேறு இடங்களிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பாகிஸ்தானின் பெஷாவர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட பேரணியில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர். இம்ரான் கான் தேர்தலில் வெற்றி அடைந்த தினத்தை கருப்பு தினமாகவும் அவர்கள் அனுசரித்தனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.