விஷேட நீதாய மேல் நீதிமன்றத்தில் கோட்டாபய!!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கொழும்பு விஷேட நீதாய மேல் நீதிமன்றத்தில் தற்போது முன்னிலையாகியுள்ளார்.


முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேருக்கு எதிரான வழக்கு விசாரணை, கொழும்பு விஷேட நீதாய மேல் நீதிமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையிலே கோட்டாபய, குறித்த வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் தற்போது முன்னிலையாகியுள்ளார்.

டீ.ஏ.ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு அரச நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டு, சட்டமா அதிபர் திணைக்களத்தால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.