ரயில் கட்டணங்கள் உயர்த்தப்படலாம்!!

ரயில் கட்டணங்கள் உயர்த்தப்படக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை இராஜாங்க அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் நேற்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் அவர்,

எதிர்வரும் 2024ஆம் ஆண்டு அளவில் இலங்கையில் மின்சார ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தூண்களின் மேல் இயங்கக்கூடிய இலகு ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் இதனால் ரயில் கட்டணங்கள் உயர்த்தப்பட நேரிடும் எனவும் அவர் கூறியுள்ளார்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.