மைத்திரி எடுத்த முடிவுக்கு பெருகும் ஆதரவு!

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட தீர்மானத்திற்கு அநுராதபுர மாவட்டத்தில் மக்கள் ஆதரவு அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


அநுராதபுரம் வலிசிங்ஹ ஹரிஸ்சந்திர விளையாட்டரங்கில் இடம்பெறும் “என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா” கண்காட்சி திடலில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி அலுவலகத்தின் விசேட கண்காட்சி கூடத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தினூடாக இது தொடர்பாக மக்கள் கருத்து அறியப்பட்டு வருவதுடன், கண்காட்சியை பார்வையிடவரும் பெருமளவு மக்கள் இதற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அங்கு பெறப்பட்ட மக்கள் கருத்துக்களின் படி 95 வீதமானவர்கள் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கெதிராக மரணதண்டனை வழங்குவதற்கு ஆதரவான கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

இன்று ஆரம்பமான இக் கண்காட்சியை சமயத் தலைவர்கள், பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட பல்வேறு தொழில்வல்லுனர்கள், பொதுமக்கள் பெருமளவிலானோர் வருகை தந்து ஆர்வத்துடன் பார்வையிட்டுள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போதைப் பொருள் கடத்திலில் ஈடுபடுபவர்களுக்கு மரணதண்டனை வழங்கும் முடிவினை எடுத்த போது உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் பெரும் எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டன.

ஜனாதிபதி இந்த முடிவிலிருந்து பின்வாங்க வேண்டும் என்றும் பல தரப்பினரும் கோரிக்கைவிடுத்திருந்ததுடன், எதிர்ப்புக்களையும் வெளியிட்டிருந்தனர். இந்நிலையில் அனுராதபுர மாவட்டத்தில் மக்கள் ஜனாதிபதியின் இம்முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.