மூளாய் ஆலடியில் உள்ள காணியில் பொன்னாலை - மூளாய் சந்தை -விரைவில்!!

பொன்னாலை - மூளாய் சந்தை அமைப்பதற்கான தற்காலிக காணி ஒன்றை வலி.மேற்கு  பிரதேச சபை குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொண்டுள்ளது.

மூளாய் அரசடிச் சந்தியில்,  குட்டிப் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள காணியிலேயே சந்தை அமைக்கப்படவுள்ளது.


மேற்படி காணி 20 வருட குத்தகைக்கு பிரதேச சபையால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தக் காணியில் மிக விரைவில் சுகாதாரமான முறையில் சந்தைக் கொட்டகைகள் அமைக்கப்படவுள்ளன.

மூளாயில் ஏற்கனவே சந்தை  அமைக்கப்பட்டிருந்த காணி உரிமையாளர் அக்காணியை மீளப் பெற்றுள்ளமையால் மரக்கறி மற்றும் மீன் வியாபாரிகள் வீதிகளில் வைத்து விற்பனையை மேற்கொண்டுவருகின்றனர்.

இதனால் பெரும் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில் இப்பிரச்சினைக்கு விரைவாகத் தீர்வு காணுமாறு பொன்னாலை வட்டார உறுப்பினர் ந.பொன்ராசா, மூளாய் வட்டார உறுப்பினரும் உப தவிசாளருமான எஸ்.சச்சிதானந்தன் மற்றும் உறுப்பினர்கள் சபையில் வலியுறுத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.