“ஆகாய கடல் வெளி”லெப். கேணல் சரா உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

27.07.1991 அன்று “ஆகாய – கடல் – வெளி” நடவடிக்கையின்போது ஆணையிறவுத் தடைமுகாம் மீது இரண்டாவது தடவையாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப். கேணல் சரா உட்பட ஏனைய (69) மாவீரர்களின் 28ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
“ஆகாய – கடல் – வெளி” சமரானது 10.07.1991 அன்று மேற்கொள்ளப்பட்டு வெற்றிக் கொள்ளப்படாதிருந்த தடைமுகாம் மீது 27.07.1991 இரண்டாவது தடவையாக விடுதலைப் புலிகளால் பாரிய தாக்குதல் தொடுக்கப்பட்டது.
தொடர்ச்சியாக மூன்று நாட்கள் நடாத்தப்பட்ட இந்த தாக்குதலில் சிறிலங்கா இராணுவத்தினர் பலர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்தனர். இந்த நடவடிக்கையின்போது படைத்தளம் நோக்கி முன்னகர்ந்த போராளிகளிற்கு காப்பாக விடுதலைப் புலிகளினால் உருவாக்கப்பட்ட “கவச ஊர்தி” ஒன்று பயன்படுத்தப்பட்டது.

இக் கவச ஊர்தி படையினரின் எறிகணை வீச்சில் சிக்கிக்கொண்டபோது இதனை ஓட்டிச் சென்ற தளபதி லெப்.கேணல் சரா மற்றும் மேஜர் குகதாஸ் உட்பட 69 வரையான போராளிகள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர்.
விடுதல


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.