இரு விபத்துக்களில் ஒருவர் உயிரிழப்பு- 24 பேர் காயம்!
நாட்டில் இடம்பெற்ற இருவேறு பேருந்து விபத்துக்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு 24 பேர் காயமடைந்துள்ளனர்.
அந்தவகையில், கொழும்பு – கண்டி பிரதான வீதியின் நிட்டம்புவ, கல்பிட்டிய பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர்.
இன்று அதிகாலை பேருந்து ஒன்று மோட்டார் வாகனம் ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட போது எதிரில் வந்த லொறியுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் பேருந்து தடம்புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் காயமடைந்த இரு வாகனங்களின் சாரதிகள் உட்பட 7 பேர் வதுபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் லொறியின் சாரதி உயிரிழந்துள்ளார். இதன்போது தெஹிவள பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக நிட்டம்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, தனியார் பேருந்து மற்றும் முச்சக்கர வண்டி மோதுண்டு விபத்துக்குள்ளானதில் 18 பேர் காயமடைந்துள்ளனர்.
ஹங்குரன்கென-லகுஹேன்வல – ஹபுகஸ்தெனிய வீதியிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர்கள் ரிகில்லகஸ்கட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை