சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 7 பேர் உயிரிழப்பு!

சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்ட்டார் மாவட்டத்தில் சிறப்பு படையினரின் தேடுதல் வேட்டையில் நக்சலைட் இயக்கத்தைச் சேர்ந்த 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.


குறித்த பகுதியில் சில நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக அம்மாவட்ட சிறப்பு படையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியை   சிறப்புப் படையினர் சுற்றிவளைத்தனர்.

இதன்போது, அங்கு மறைந்திருந்த நக்சலைட்டுகள் சிறப்பு படையினர் மீது துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டனர். இதையடுத்து சிறப்புப் படையினரின் பதில் தாக்குதலில் 7 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டதாக நக்சல் ஒழிப்பு வேட்டை சிறப்பு படை டி.ஐ.ஜி. சுந்தர் ராஜ் தெரிவித்துள்ளார்.

மேலாதிக்கவாதிகளின் அடக்குமுறைகளால் பாதிக்கப்படும் கீழ்த்தட்டு மக்களில் சிலர் இரு வர்க்கத்துக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பதற்கு ஆயுத வன்முறையே சிறந்த தீர்வென கருதுகின்றனர்.

பல்லாண்டு காலமாக அரசிடம் போராடி பெறமுடியாத சில சலுகைகளையும் ஆயுதப் புரட்சியின்மூலம் அடைந்துவிட முடியும் எனக் கருதும் இவர்கள் சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திரா, ஜார்கண்ட், மணிப்பூர் உள்ளிட்ட சில மாநிலங்களில் நக்சலைட்டுகளாகவும், மாவோயிஸ்ட்டுகளாகவும் காடு, மலைகளில் பதுங்கி வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களை வேட்டையாட தனிப்படைப் பிரிவினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த படையினருக்குத் துணையாக மத்திய ஆயுதப் படை பொலிஸாரும் தேடுதலில் ஈடுபட்டுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.