கடலிற்குச் சென்ற மீனவர் மாயம்.!
திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெருகல் பிரதேசத்தில் நேற்றிரவு மீன் பிடிக்கச் சென்ற ஏழு மீனவர்களில் ஒரு மீனவர் கடலில் மாயமாகியுள்ளார்.
அம்மீனவரை தேடும் பணியில் பிரதேச மக்களும் கடற்படையினரும் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு காணாமல் போன மீனவர், வெருகல் – இலங்கை துறைமுகத்துவாரம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய பாலசிங்கம் பரமானந்தம் எனத் தெரிய வருகின்றது.
நேற்றிரவு தனது ஏழு நண்பர்களுடன் மீன் பிடிப்பதற்காக படகில் சென்றபோது படகு இயந்திர கோளாறு காரணமாக கவிழ்ந்ததாகவும், இதனையடுத்து ஆறு மீனவர்களும் நீந்திய நிலையில் கடற்கரையை வந்தடைந்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
காணாமல் போன மீனவர் திருமணம் செய்து மூன்று மாதங்கள் கடந்த நிலையிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், மீனவரை தேடும் பணியில் பிரதேச மக்களும், கடற்படையினரும் ஈடுபட்டு வருவதாகவும் தெரியவருகின்றது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை