தீர்வு வழங்காவிட்டால் தற்கொலை செய்வோம் – வேலையற்ற பட்டதாரிகள் எச்சரிக்கை!
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகள் அரச தொழில் நியமனம் வழங்குமாறு கோரி சுழற்சி முறையிலான சத்தியாக்கிரக போராட்டமொன்றினை ஆரம்பித்துள்ளனர்.
மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்பாக இன்று (திங்கட்கிழமை) இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் ஆரம்பித்த இந்த சத்தியாக்கிரக போராட்டத்தில் நூற்றுக்கணக்கான வேலையற்ற பட்டதாரிகள் கலந்துகொண்டனர். இந்த ஆர்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரனும் கலந்துகொண்டார்.
வெளிவாரிப்பட்டதாரிகளை தொழில் வழங்கும் விடயத்தில் புறக்கணிக்ககூடாது என தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், இந்த போராட்டம் கடந்த 4 வருடங்களாக இடம்பெற்று வருவதாகவும் சுட்டிக்காட்டினர்.
மேலும் இந்த விடயம் தொடர்பாக தீர்வு வழங்கப்படாவிட்டால், தற்கொலை செய்துகொள்வோமென்றும் விளைவுகளுக்கு அரசாங்கமே பொறுப்பு கூறவேண்டுமென்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மட்டக்களப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த இடத்திற்கு வந்து தீர்வு தரவேண்டும் என்றும் அதுவரை தொடர்ந்து போராடுவோம் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் 10 ஆயிரத்து 500 பட்டதாரிகளுக்கு ஒரு மாதத்திற்குள் வேலை வாய்ப்பை பெற்றுதருவதாக நேற்று அறிக்கை விடுத்துள்ளார்.
எனவே அவர் இதனை எந்த அடிப்படையில் வழங்கபோகிறாரென்பதை தெரிவிக்க வேண்டும் என்றும் அவ்வாறு இல்லையெனில், அவரது அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என்றும் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை