பாவனைக்கு வருகிறது டபுள் டெக்கர் பஸ்!

பிரித்தானியாவில் இருந்து 1952 ஆம் ஆண்டு இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு சேவையில் ஈடுபட்ட டபுள் டெக்கர் பஸ் (British Leyland double-decker bus) சில காலமாக பழுதடைந்திருந்த நிலையில் இருந்தது.


இந் நிலையில் போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அர்ஜுனா ரனதுங்காவின் வழிகாட்டுதலின் பேரில், டபுள் டெக்கர் பழைய பேருந்துகள் சீரமைப்பு திட்டத்தின் கீழ் லக்திவா பொறியியல் நிறுவனத்தால் 30 லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சீரமைக்கப்பட்ட டபுள் டெக்கர் பஸ்சை மகாரகம டிப்போவிடம் போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அர்ஜுனா ரனதுங்கா ஒப்படைத்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.