சிறுநீரக பாதிப்புக்குள்ளான குடும்பம் உதவியை நாடிநிற்கிறது!!

குடும்பத்தில் மூவர் சிறுநீரக பாதிப்புக்குள்ளாகிய நிலையில் ஒருவர் இறந்து விட்டார்.


கிளிநொச்சி கிருஸ்ணபுரம் இலக்கம் 113 இல் வசிக்கின்ற  சந்தனம் யேசுவான் குடும்பத்தில் அவர்  உட்பட மூவர் சிறு நீரக பாதிப்புக்குள்ளான நிலையில்  மூத்த மகள் யே. கரோலினா(வயது 23)  கடந்த 2017.06.03 அன்று சிறு நீரக பாதிப்பால் மரணமடைந்துவிட்டார்.

தற்போது குடும்பத் தலைவரான ச. யேசுவான் ( வயது 66) மற்றும் அவரது மகன் யே.லியோன்சன் ( வயது 17) ஆகியோரும்  சிறு நீரக பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இதில்  லியோன்சன் இரண்டு வாரத்திற்கு ஒரு முறை யாழ்பாணம் சென்று dialysis  செய்ய வேண்டும் .மிக மோசமான பாதிப்புக்குள்ளாகியுள்ளனர் என மருத்துவர்கள் தெரிவித்ததாக குறிப்பிடுகின்றனர்.

அத்தோடு இவரது ஒரு மகன்  22 வயதில் கடந்த 2018.03.24 அன்று பஸ் விபத்தில் உயிரிழந்து விட்டார். தற்போது ஐந்து அங்கத்தவர்களை கொண்ட குடும்பத்தின் வாழ்வாதாரத்தை புடவை கடை பணியாற்றும் மகன் ஒருவரே கவனித்து வருகின்றார்.

மருத்துவச் செலவு , வாழ்வாதார செலவுகளை ஈடுசெய்ய முடியாது யேசுவான் குடும்பம் பெரும் நெருக்கடிக்குள் வாழ்ந்து வருகின்றது. எனவே உதவி செய்யும் நல்லுள்ளங்களிடமிருந்து அவர்கள் உதவியை நாடி நிற்கின்றனர். தொடர்புக்கு ச. யேசுவான் - 0770287240



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.