திருகோணமலையில் பட்டதாரிகள் போராட்டம்!
‘பிரிவினையின் வித்தான ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி அரசே, அரசியல்வாதிகளையும் அரசியல் கட்சிகளையும் பிரித்தாளும் தந்திரோபாயத்தை பட்டதாரிகளிடத்தில் பிரயோகிக்காதே’ என வலியுறுத்தி திருகோணமலையில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
திருகோணமலை மாவட்டத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் இன்று (புதன்கிழமை) காலை கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக இந்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
உள்வாரி, வெளிவாரி, உள்நாட்டு பல்கலைக்கழகம், வெளிநாட்டு பல்கலைக்கழகம் மற்றும் HNDA, HNDE என பாகுபடுத்தி இலங்கையின் எதிர்கால சந்ததியின் மனதில் பிரிவினைவாதத்தினை ஏற்படுத்த வேண்டாமென போராட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரிகள் வலியுறுத்தினர்.
மேலும் படித்த பட்டதாரிகள் அனைவருக்கும் பட்டம் பெற்ற ஆண்டின் அடிப்படையில் வேலை வாய்ப்பினை வழங்கவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அத்தோடு, குறித்த கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றினை ஆர்ப்பாட்ட இடத்திற்கு வந்த நாடாளுமன்ற உருப்பினர் வியாழேந்திரனிடம் கையளித்தனர்.
அதன்பின்னர் கிழக்கு மாகாண ஆளுநரை போராட்டக்காரர்கள் சிலர் சந்தித்து கலந்துரையாடினர். அதனைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்த ஆளுநர், பட்டதாரிகளது கோரிக்கைகளை கேட்டறிந்தார். இதன்போது ஆளுநரிடமும் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் கையளிக்கப்பட்டது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை