நல்லாட்சிக்கு காலக்கெடு விதித்த தேரர்!

அமைச்சர் ரிசாட் பதியுதீன் தொடர்பாக எதுவித நடவடிக்கையையும் எடுக்காத கூட்டுஅரசாங்கம் 7 நாள்களில் ஆட்சியிலிருந்து வெளியேற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.


நேற்­று­முன்­தி­னம் கொழும்­பில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லா­ளர் சந்­திப்­பி­லேயே அவர் இதனை கூறியுள்ளார்.

அமைச்­சர் ரிசாட் பதி­யு­தீன் தீவி­ர­வா­தி­ க­ளு­டன் கடந்த காலங்­க­ளில் எவ்­வா­றான தொடர்­பு­க­ளில் இருந்­தார் என்­ப­தற்­கான பல்­வேறு தக­வல்­களை நாம் வெளி­யிட்­டி­ருந்­தோம்.

அத்துடன் ரிக்ஷாட் காணி­களை வழங்­கி­யது, அரச வாக­னங்­களை க்ஷஹ்­ரான் உள்­ளிட்ட தரப்­பி­ன­ருக்கு வழங்­கி­யது என்­பன தொடர்­பான தக­வல்­களை நாம் ஆதா­ரத்­து­டன் வழங்­கி­யி­ருந்­தோம்.

எனி­னும், இதனைஅரசாங்கம் மூடி­ம­றைத்து, மீண்­டும் அவ­ருக்கு ஒரு மாதத்­தில் அமைச்­சுப் பத­வியை வழங்­கி­யுள்­ளது.

இச்செயலானது மக்­க­ளின் ஆணை­யை­யும் மன­சாட்­சி­யை­யும் ஜன­நா­ய­கத்­தை­யும் மீறும் ஒரு செயற்­பா­டா­கும் என்றும் தேரர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இவ்­வா­றான செயற்­பாட்­டில் ஈடு­பட்ட இந்த அரசாங்கத்தை வெளி­யேற்ற, நாட்டு மக்­கள் அனை­வ­ரும் ஒன்­றி­ணைய வேண்­டும் என்றும், எதிர்­வ­ரும் 7 நாள்­க­ளில்அரசாங்கத்தை ஆட்­சி­யி­லி­ருந்து வெளி­யே­ற­வேண்­டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்ன தேரர் இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.