வ/கனராயன்குளம் ஆரம்ப வித்தியாலயத்தில் திறன் வகுப்பறை திறந்துவைக்கப்பட்டது!!

வவுனியா வடக்கு கல்வி வலயத்திற்குட்பட்ட
வ/கனராயன்குளம் ஆரம்ப வித்தியாலயத்தில் மன்னகுளத்தை சேர்ந்த  இராசரத்தினம் கோகிலேஸ்வரனின் ஞாபாகர்த்தமாக திறன் வகுப்பறை (Smart class) இன்று 30.07.2019 இராசரத்தினம் மனோன்மணி அவா்களால் திறந்துவைக்கப்பட்டு, பாடசாலைக்கான 13 கண்காணிப்பு கமராக்களும் பாடசாலை அதிபாிடம் கையளிக்கப்பட்டது.


பாடசாலை அதிபர் திரு செ.பாலகிருஸ்ணன் தலமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினா் சிவசக்தி ஆனந்தன்,வவுனியா வடக்கு வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி அன்னமலர் சுரேந்திரன், கோகிலேஸ்வரனின் குடும்பத்தினா், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா, வடக்கு வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர் திருமதி தேவிகா,
ஆரம்ப உதவிக் கல்விப் பணிப்பாளா் திரு.தவேந்திரலிங்கம்,அயல் பாடசாலைகளின் அதிபா்கள்,ஆசிரியர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இவ் திறன் வகுப்பறை அமைப்பதற்கான நிதி உதவியை லண்டனை சேர்ந்த அமரர் இராசரத்தினம் கோகிலேஸ்வரனின் சகோதரன் திரு இராசரத்தினம் சுதாகரன் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலைக்கு உதவிபுாிந்த இராசரத்தினம் குடும்பத்தினருக்கு
(சுதாகரனுக்கும்) பாடசாலை சமூகம்  நன்றியை தொிவித்துக் கொண்டனா்







கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.