தென்கொரியா செல்லும் மட்டு. மாநகர முதல்வர் தலைமையிலான குழு!!

மட்டக்களப்பு மாநகர முதல்வர் தலைமையிலான குழுவினர் தென்கொரியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டுள்ளனர்.


மட்டக்களப்பு மாநகர சபை, யுனிசெப் நிறுவனத்துடன் இணைந்து மட்டக்களப்பு மாநகரை சிறுவர் சினேகபூர்வ மாநகரமாக மாற்றியமைக்கும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் செயற்றிட்ட அமர்வில் கலந்துகொள்வதற்காக அவர்கள் இந்த விஜயத்தை மெற்கொண்டுள்ளனர்.

அதற்கமைய மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையிலான குழுவினர் தென்கொரியாவின் சீயோல் நகருக்கு விஜயம் செய்துள்ளனர்.

குறிப்பாக சீயோல் நகரில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் சிறுவர் நேய நகருக்கான நிர்வாகக் கட்டமைப்புகளை பார்வையிடுவதோடு, தற்கால நவீன தகவல் தொழில்நுட்பம் மற்றும் திண்மக் கழிவு முகாமைத்துவம் தொடர்பாக மட்டக்களப்பு மாநகர சபையுடன் புரிந்துணர்வு உதவிகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கிலும் மேற்படி விஜயம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தொடரில் கிழக்கு மாகாண உள்ளளூராட்சி ஆணையாளர் நா.மணிவண்ணன், மாநகர ஆணையாளர் கா.சித்திரவேல், பிரதி ஆணையாளர் நா.தனஞ்ஜெயன், நிர்வாக உத்தியோகத்தர் ரோகிணி விக்ணேஸ்வரன் மற்றும் யுனிசெப் நிறுவனத்தின் பிரதம வெளிக்கள அலுவலர் றிபென்சியா ஆகியோர் இணைந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.