சுமந்திரனின் கோட்டைக்குள்ளே புகுந்து விக்னேஸ்வரன் மக்கள் சந்திப்பு!!📷

வரப்போகும் தேர்தலில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி வி விக்னேஸ்வரன் அவர்கள் தனது கட்டு காசையும் இழப்பார் என நேற்றைய
தினம் சுமந்திரன் அவர்கள் காரசாரமாக விமர்சித்திருந்தார் ஆனால் இன்றைய தினம் சி வி விக்னேஸ்வரன் அவர்கள் சுமந்திரன் அவர்களது சொந்தத் தொகுதியிலேயே சுமந்திரனின் கோட்டைக்குள்ளே புகுந்து மக்கள் சந்திப்பு நடத்தியிருக்கின்றார் இன்றைய தினம் வடமராட்சி கிழக்கில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் உட்பட கட்சியின் உயர்மட்டக் குழுவினர் சென்று மக்கள் சந்திப்பு ஒன்றை நிகழ்த்தினார் இதில் ஊர் மக்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர் தொடர்ச்சியாக அனைத்து ஊர்களிலும் சென்று மக்கள் சந்திப்புகளில் ஈடுபட உள்ளதாக இதன்போது கட்சியினர் தெரிவித்தனர்

No comments

Powered by Blogger.