72 வருடங்களுக்கு பின் வெளிநாட்டில் திறக்கப்பட்ட இந்து ஆலயம்!!

பாகிஸ்தானின் சியால்கோட்டில் அமைந்துள்ள மிகப் பழமையான இந்துக் ஆலயம் சுமார் 72 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்டுள்ளது.

இந்து முறைப்படி கோயிலில் பரிகாரப் பூஜைகள் செய்யப்பட்டு கோயில் திறக்கப்பட்டதாக தி எக்ஸ்பிரஸ் டிரிபியூன் செய்தி வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தானில் வாழும் சிறுபான்மையினமான இந்து மக்களின் நீண்ட நாள் கோரிக்கையினைத் தொடர்ந்தே குறித்த ஷவாலா தீஜா சிங் கோயில் திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோயிலை மறுசீரமைப்பதற்கான பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பாகிஸ்தான் அரசாங்கம் அறிவித்துள்ளது.
அத்துடன் இந்தியாவிலிருந்து இந்து கடவுள் சிலைகள் கொண்டு வரப்பட்டு அங்கு பிரதிஷ்டை செய்யப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு மூடப்பட்ட குறித்த கோயில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் உத்தரவின் பேரில் தற்போது திறக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சில நாட்களுக்கு முன்னரே, சியால்கோட்டிலுள்ள 500 ஆண்டுகள் பழமையான குருத்வாரா கோயிலும், இந்திய சீக்கிய பக்தர்கள் உள்ளே நுழைய அந்நாட்டு அரசங்கம் அனுமதி வழங்கியது. இதற்கு முன்னர் குறித்த குருத்வாரா கோயிலுக்குள் பாகிஸ்தானியர்கள் மட்டுமே நுழைய முடியும் என்பதோடு , இந்திய பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.