‘காம்ரேட்’டாக மாறிய விஜய் சேதுபதி!!
டியர் காம்ரேட் படத்துக்காக விஜய் சேதுபதி பாடிய ‘காம்ரேட் ஆன்தம்’ பாடல் வெளியாகியுள்ளது.
அறிமுக இயக்குநர் பாரத் கம்மா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் டியர் காம்ரேட். கீதா கோவிந்தம் திரைப்படத்துக்குப் பிறகு, விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா ஜோடி இந்தப் படத்தில் மீண்டும் இணைந்துள்ளது. தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் உருவாகி வரும் இந்தப் படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தின் டீசர் கடந்த மார்ச் மாதத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து படத்தின் டிரெய்லர் கடந்த ஜூன் 11ஆம் தேதி வெளியிடப்பட்டது. ஜூலை 26ஆம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தின் ரிலீஸை முன்னிட்டு புரொமோஷன் பணிகளில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நான்கு மொழிகளிலும் இந்தப் படத்தின் ‘காம்ரேட் ஆன்தம்’ என்ற பாடல் வெளியாகியுள்ளது. பாடலின் தமிழ் வெர்ஷனில், விஜய் சேதுபதி பாடியுள்ளார். மேலும் ஸ்டோனி சைகோ, டோப் டேடி ஆகியோரும் உடன் பாடியிருக்கின்றனர். வா ஒன்னா சேரலாம் வா என்று ஆரம்பிக்கும் இந்தப் பாடல் துடிப்பான இசை மற்றும் வரிகளுடன் ஈர்க்கிறது. ஸ்டோனி சைகோ, டோப் டேடி ஆகியோரே இந்தப் பாடலை எழுதியுள்ளனர்.
தமிழில் விஜய் சேதுபதி பாட, மலையாளத்தில் துல்கர் சல்மானும், தெலுங்கில் படத்தின் நாயகனான விஜய் தேவரகொண்டாவும் பாடியுள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை