யாழில் இடம்பெற்ற போதையிலிருந்து விடுதலையான தேசம் நிகழ்வு!!📷

ஜனாதிபதி மைத்திரிபாலா சிறிசேனாவின் வழிகாட்டலில் ”போதையிலிருந்து விடுதலையான தேசம்  ”எனும் தொனிப்பொருளிலான நிகழ்ச்சித்  திட் டத்தின் இறுதி நாள் நிகழ்வு  இன்று [ 01.07.2019  வடக்கில் பல்வேறு பிரதேச செயலங்களில்
இடம்பெற்றது. அந்தவகையில்    அரசாங்க அதிபர் தலைமையில்  யாழ் பேருந்து நிலையத்திலிருந்து யாழ் மாவட்ட  செயலகம் வரை இடம்பெற்ற விழிப்புணர்வு பவனியில் அரச அலுவலர்கள் அனைவரும் கலந்து கொண்டு  போதைக்கு எதிரான பல்வேறு கோஷங்களையும்  எழுப்பினார்கள் . 


அத்துடன் பறை மேளங்கள்  அதிர  கூண்டில் அடைக்கப் பட்ட போதை அரக்கனுடனான ஊர்தியினை  யாழ் பிரதேச செயலாளர் எஸ் .சுதர்சன் தலைமையிலான குழுவினர் ஆற்றுகைக்கான காண்பியமாக தயாரித்திருந்தார்.


 கோஷங்களும் ஊர்தியும் இணைந்த பவனி மாவட்ட செயலகத்தை வந்தடைந்ததும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினரினால் போதைக்கு எதிரான விழிப்புணர்வூட்டும் நாடகமும் இடம்பெற்றது.


 இச் செயற்திட்டத்தில்  சமூக செயட்பாட்டு மையம்,  இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் பல்வேறு அரச சார்பற்ற நிறுவனங்களும் பங்கு கொண்டமை குறிப்பிடத்தக்கது. 

 யாழ் .தர்மினி பத்மநாதன்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.