பிரியாவுக்கு அடிக்கும் ஜாக்பாட்!

சின்னத் திரையிலிருந்து வெள்ளித் திரைக்கு வந்த நாயகிகள் தமிழ் சினிமாவில் வெற்றிகரமாக கதாநாயகியாக வலம் வரமுடியும் என்பதை பிரியா பவானிசங்கர் நிரூபித்து வருகிறார்.


ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன் நடித்து வருகிறார். இதில் மூன்று கதாநாயகிகள் நடிக்கின்றனர். காஜல் அகர்வால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. அதனுடன் பிரியா பவானிசங்கரும் படக்குழுவில் இணைந்தது உறுதியானது. திரையுலகில் அறிமுகமாகி வெகு விரைவில் முக்கியமான படங்களில் ஒப்பந்தமாகி வருவதாக பிரியா பவானிசங்கர் குறித்து பேச்சுகள் அடிபடத் தொடங்கியுள்ள நிலையில் அவர் அடுத்ததாக விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.
விக்ரம் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை கடாரம் கொண்டான் வெளியாகியுள்ளது. அடுத்ததாக அவர் இமைக்கா நொடிகள் படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் புதிய படத்தில் நடிப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தில்தான் பிரியா பவானிசங்கர் கதாநாயகியாக இணைந்துள்ளார்.
இது விக்ரம் நடிக்கும் 58ஆவது படமாகும். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டு அடுத்த ஆண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகவுள்ளன.
செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனமும், வியாகாம் 18 ஸ்டூடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.