அவன் அழைப்புக்காக!!

விழித்திரை முழுவதும்
விலகாத உன்  முழுப்படம்
வீங்கிருளில் எரியும் விளக்காய்
உன் நினைவினில் என் கணப்பொழுதுகள்!

அணை கட்ட  முடியா நினைவலையில்
விழி உடைத்து பாயும் பெருவெள்ளம்
நாற்கடல் சூழ்ந்த நடுத் தீவாக
தனிமையில்  உயிர்ப்போராட்டம்!

தாய் வாசம் தேடும் மழலைபோல்
உன் வாசம் தேடி முகம் புதைக்கிறேன்
சுடுகின்ற மனதினில் கோடை மழையாய்
உன் வியர்வைப் பூவே என் சுக வாசம் !

உயிர்போர்த்தி  வைத்த காதல்
விந்தையென ஆய்வு செய்யத்தான்
விதி உன்னைக் களவாடிச் சென்றதோ?..இல்லை
காதல் தன்னையே உறுதி செய்யதத்தான்
நம் காதலைத் தேர்வு செய்ததோ...?

என் காதலே  நீ உறங்கு
உன் உலகம் நான் சேர
காலனுக்கு மனுக்கொடுத்து
காத்திருக்கிறேன் அவன் அழைப்புக்காக !!!

- ஜெயவவா அன்பு

No comments

Powered by Blogger.