கிராமபோன் காலத்துக்கு திரும்பும் தமன்னா!!
தமன்னா நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
பிரதான கதாபாத்திரங்களில் நடிக்க விருப்பம் காட்டும் தமன்னாவுக்கு பெரும்பாலான கதாநாயகிகள் போலவே ஹாரர் படங்கள்தான் அணிவகுக்கின்றன. இந்த ஆண்டு அவர் நடிப்பில் கண்ணே கலைமானே, தேவி 2 ஆகிய படங்கள் தமிழில் வெளியாகியுள்ளன. தெலுங்கில் எஃப் 2 - ஃபன் அண்ட் ஃப்ரஸ்ட்ரேஷன், இந்தியில் காமோஷி என்ற படமும் வெளியாகியுள்ளன. இவற்றில் தேவி 2, காமோஷி ஆகிய படங்களும் ஹாரர் ஜானரைச் சார்ந்தவை.
கண்ணே கலைமானே படத்தில் உதயநிதி கதாநாயகனாக நடித்திருந்தாலும் படத்தில் தமன்னாவின் கதாபாத்திரத்திற்கே அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்தது. டைட்டிலும் அவரது கதாபாத்திரத்தைக் குறிக்கும் விதமாக அமைந்திருந்தது.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த தேவி 2 ரசிகர்களை திருப்திபடுத்தத் தவறியது. தற்போது அவர் நடிப்பில் உருவாகிவரும் ‘பெட்ரோமாக்ஸ்’ படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டு செப்டம்பர் மாதம் படம் வெளியாகும் என அறிவித்துள்ளது.
போஸ்டரில் பல வருடங்களுக்கு முந்தைய வீட்டின் உட்புறம் காட்டப்பட்டுள்ளது. அதில் அப்போது பயன்பாட்டில் இருந்த தொலைபேசி, கிராமபோன் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இதனால் படத்தில் பெரும்பாலான ஹாரர் படங்களைப் போலவே பிளாஷ்பேக் காட்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கும் என தெரிகிறது. காலத்தால் சற்றுப்பின்தள்ளிய கதைக்களம் என்பதாலே பெட்ரோமாக்ஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
யோகிபாபு, மன்சூர் அலிகான், முனிஸ்காந்த் ஆகியோர் இப்படத்தில் நடிக்கவுள்ளனர். ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்தை பேஷன் பிலிம்ஸ் தயாரிக்கிறது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை