சுவையான வடைகறி செய்வது எப்படி!!

தேவையான பொருட்கள் :கடலைப்பருப்பு - 1 கப்
சோம்பு - 1 டீஸ்பூன் 
வரமிளகாய - 2 
உப்பு - தேவையான அளவு

கிரேவி செய்ய :
வெங்காயம் - 1 
தக்காளி - 2 
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன் 
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன் 
தனியா தூள் - 1 டீஸ்பூன் 
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை 
கொத்தமல்லி - சிறிது

தாளிக்க  :
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் 
பட்டை - 1 
கிராம்பு - 2 
பிரியாணி இலை - 1 
பச்சை மிளகாய் - 1 
கறிவேப்பிலை - சிறிது


செய்முறை :
* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* தக்காளியை நீரில் போட்டு சிறிது நேரம் அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும். பின் அதன் தோலை நீக்கிவிட்டு, அதனை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். 

* கடலைப்பருப்பை நன்றாக கழுவி 2 மணிநேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். ஊற வைத்த கடலைப்பருப்பை நன்கு கழுவி, அதனை மிக்ஸியில் போட்டு, அத்துடன் வரமிளகாய், சோம்பு மற்றும் உப்பு சேர்த்து சேர்த்து, தண்ணீர் சேர்க்காமல் கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும். 

* அரைத்த மாவை சிறுசிறு வடைகளாக தட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். 

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, அடுத்து வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

* வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அரைத்து வைத்துள்ள தக்காளியை ஊற்றி, மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, 3/4 கப் தண்ணீர் ஊற்றி, கொதிக்க விட வேண்டும். 

* பிறகு அதில் வடைகளை 4 துண்டுகளாக பிய்த்து போட்டு, மிதமான தீயில் 5 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான வடைகறி ரெடி!!!

* வடையை உதிர்த்து போட்டும் வடைகறி செய்யலாம். விருப்பப்பட்டால் தேங்காய் பால் சேர்த்து கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.