வெண்கரம் படிப்பகத்திற்கு பாடப்புத்தகங்கள் வழங்கிய க.பொ.த உயர்தர மாணவி!!
அராலி மத்தியைச் சேர்ந்த மாணவி கிருபாகரன் கனிஸ்ரா வெண்கரம் படிப்பகத்திற்கு தனது பாடப் புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.
அராலி வள்ளியம்மை வித்தியாசாலையில் கல்வி கற்ற மேற்படி மாணவி, கடந்த 2018 ஆம் வருடம் க.பொ.த சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றி சிறந்த பெறுபேறு பெற்று தற்போது உயர்தரத்தில் கல்வி கற்றுக்கொண்டிருக்கின்றார்.
க.பொ.த சாதாரணதரப் பரீட்சையின்போது தான் வாங்கிப் படித்த கடந்த கால பரீட்சை வினாவிடைகள், மற்றும் புத்தகங்களை வெண்கரம் படிப்பகத்தில் இம்முறை க.பொ.த சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் நன்மை கருதி வழங்கியுள்ளார்.
குறித்த மாணவியின் முன்னுதாரண செயற்பாட்டைப் பாராட்டியுள்ள வெண்கரம் நிர்வாகம் இதேபோன்று ஏனைய மாணவர்களும் செயற்பட்டால் கஷ்ட நிலையில் உள்ள மாணவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளனர்.

.jpeg
)

கருத்துகள் இல்லை