பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்த மா்மநபா் கைது!!
கலவானை பிரதான பஸ் நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய குறித்த நபரின் கைப்பொதியினை பொலிஸார் பரிசோதனைக்குட்படுத்தினர்.
இதன்போது இறப்பரினால் செய்யப்பட்ட செயற்கை ஆணுறுப்பு மற்றும் 25 கருத்தடை சாத னங்கள் என்பன கைப்பற்றப்பட்டதாகவும்,
குறித்த நபர் காலி அக்குரஸ்ஸ பகுதியைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.கடந்த சில மாதங்களாக கலவானை பிரதேசத்தின் பல்வேறு கிராமங்களிலும்
பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சிக்கும் நபரொருவர் கிராமங்களில் உலா விவருதாகவும்,பெண்களை பலாத்காரம் செய்ய முயற்சிக்கும் வேளையில்
அப்பெண்கள் அச்சத்தில் சத்தமிடும் போது சூட்சுமமான முறையில் அந்நபர் ஓடி மறைவதாக பிரதேசமெங்கும் தகவல் பரவியிருந்தது.
இந்நிலைமையில் சம்பவதினம் இந்நபர் கைதுசெய்யப்பட்டவுடன் சந்தேக நபரை அடையாளம் காண்பதற்காக உளப் பாதிப்புக்குள்ளான பெண்கள் சிலர் வரவழைக்கப்பட்ட போது,
சம்பவங்களுடன் தொடர்புடைய உரிய நபர் இவர்தான் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்நபர் குறித்த மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை