நிலத்திற்குள்ளிருந்து வெளியே வந்த நந்திதேவர்!!
இந்தக் கிராமத்தில் பூமிக்கு அடியிலிருந்து கொம்பு முளைத்தது போன்று சில தடயங்கள் வெளியில் தென்பட்டன. இதற்கு கடந்த 40 ஆண்டுகளாக அந்தப்பகுதி மக்கள் சிறப்பு பூஜை செய்து வருகின்றனர். இந்நிலையில் அது நந்தி தேவர் சிலையாக இருக்கலாம் என்று கருதிய மக்கள் அந்தப்பகுதியில் குழிதோண்டி அதனை வெளியே எடுக்க முடிவு செய்தனர்.
இதன்படி, பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் 15 அடி ஆழத்தில் குழி தோண்டப்பட்டது. அப்போது பழைமை வாய்ந்த நந்தி தேவர் சிலைகள் காணப்பட்டது. இதனை பார்த்த மக்கள் அப்பகுதி மக்கள் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சம்பவ இடத்துக்கு சென்று சிலைகளைப் பார்வையிட்டனர். பின்னர் சிலைகளுக்கு எந்தச் சேதமும் ஏற்படாத வகையில் பூமிக்கடியில் இருந்த 2 நந்தி தேவர் சிலைகளையும் பத்திரமாக வெளியே எடுத்தனர். அதில் ஒன்று 15 அடி உயரமும், மற்றொன்று 12 அடி உயரத்திலும் இருந்தது.
இதுகுறித்து தொல்பொருள் துறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில்,
குறித்த சிலைகள் 150 ஆண்டுகள் பழைமை வாய்ந்தவையாகும். இவை சாமராஜேந்திர உடையார் காலத்தில், மேலே எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அச்சமயத்தில் தொடர்ந்த கனமழையால் வெளியே எடுக்க முடியவில்லை.
இதனால், அச்சிலைகள் மண்ணால் மூடப்பட்டுவிட்டன. நந்தி சிலைகளின் கொம்புகள் மட்டும் வெளியே தெரிந்த படி இருந்தன. இந்த நந்தி சிலைகளை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம் என்றார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை