ஐரோப்பிய ஒன்றியம் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் மரண தண்டனை தொடர்பாக ஏதிர்ப்பு!!
மரண தண்டனை விடயத்தில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அதன் உறுப்பு நாடுகள் வலுவான எதிர்ப்பை தொடர்ந்தும் தெரிவிக்கும் நிலையில் அந்த நிலைப்பாட்டினை கைவிடுமாறு ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மரண தண்டனை தொடர்பாக இன்று (வியாழக்கிழமை) ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடினர்.
இதன்போதே இலங்கையில் பல தசாப்தங்களின் பின்னர் அமுல்படுத்த தீர்மானித்திருக்கும் மரணதண்டனையை இரத்து செய்யுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
குறித்த சந்திப்பில் பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ருமேனியா மற்றும் இலங்கையில் உள்ள இங்கிலாந்து உயர்ஸ்தானிகர்கள் கலந்துகொண்டனர்.
அத்தோடு ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களான பந்துலால் பண்டாரிகொட, காவிந்த ஜெயவர்த்தன, ஹெக்டர் அப்புஹாமி மற்றும் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
.jpeg
)





கருத்துகள் இல்லை