மீன் சந்தையில் சுகாதார சீர்கேட்டை அதிகாரிகள் கவனத்திற்கு எடுப்பது இல்லையா?

5G SMART POLL லும் கொட்டடி மீன் சந்தையும்.
யாழ்ப்பாணத்தில் யாழ் மாநகர சபைக்கு சொந்தமான மீன் சந்தையில் நடைபெறுகிற சுகாதார சீர்கேட்டை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்திற்கு எடுப்பது இல்லையா? இல்லை தெரிந்தும் அக்கறை செலுத்துவது இல்லையா? 

குறிப்பாக கொட்டடி மீன் சந்தையில் மீன்களை கொள்வனவு செய்வதற்கு உள்ளூர் நுகர்வோர் தவிர வெளிமாவட்ட மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளாக யாழ்ப்பாணம் வருபவர்களும் பெருமளவில் குறித்த சந்தைக்கு வருவதும் வழமையாக உள்ளது .இது யாழ்ப்பாணத்தில் சுகாதாரத்தை வெளிமாவட்ட மக்களிக்கு எடுத்து செல்வதாக இருக்கின்றது இருந்த போதும் .குறித்த சந்தையில் மீன்களை வியாபாரிகள் கொள்வனவு செய்வதற்கு இடம் இல்லாமையால் மக்கள் நடமாடும் நிலத்தில் மக்களின் கால்களுக்கு கீழ் விலை கூறப்படுகிறது . இது மிகவும் சுகாதாரக் குறைவான ஒரு விடையமும் மக்களினால் அருவருப்பான ஒரு செயலாக பார்க்கபடுகின்றது.

 குறித்த சந்தை ஆண்டுதோறும் பல இலட்சம் குத்தகைக்கு எடுக்கப்படுகின்றது இருந்த போதும் இதனை சீர் செய்வதற்கு யாழ் மாநகர சபை முயற்சிகளை எடுக்கவில்லை என்று வியாபாரிகள் கவலைதொரிவித்தனார்கள். மக்களும் முதல்வர் எழில்மிகு நகரம் என்று 5G தொழில்நுட்பத்தை கொண்டு வருவதற்கு முன்னர் இப்படியான அத்தியாவசிய தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாத நிலையில் மாநகர சபை இருக்கின்றது .

என்பதை கவனத்தில் எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். உண்மையில் மிகவும் வேதனைக்கு உரிய விடையம் இது உடனே யாழ் மாநகர சபை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்திற்கு எடுக்க வேண்டும் குறிப்பாக முதல்வர் கவனத்திற்கு எடுத்து சீர் செய்ய வேண்டும். சம்மந்தப்பட்டவர்களுக்கு சென்று அடையும் வரை பகிரவும்.


No comments

Powered by Blogger.