மின்சார காருக்கான ஜிஎஸ்டி வரியைக் குறைக்க வலியுறுத்துவோம்!!
மின்சார வாகனங்கள் மீது விதிக்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரியைக் குறைப்பதற்கு தமிழகத்தின் சார்பில் வலியுறுத்தப்படும் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.
இதுகுறித்து தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களுக்கு அவர் வியாழக்கிழமை அளித்த பேட்டி:
சுற்றுச்சூழல் மாசுபடுவதால் காற்று மாசுபடுகிறது. இதன் மூலம், கடல் மட்டம் உயர்ந்து நீர் உள்ளே வரக்கூடிய அபாயம் உள்ளது. இதன் காரணமாக, மின்சாரத்தில் இயங்கும் நவீன வாகனங்களைத் தயாரிக்க ரூ.7 ஆயிரம் கோடி அளவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மின்சார வாகனங்களை மத்திய, மாநில அரசுகள் ஊக்கப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் அதற்கான வரியைக் குறைக்க வேண்டும் என்று உற்பத்தியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதாவது, மின்கல (பேட்டரி) வாகனங்களுக்கான வரியை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்க வேண்டும். மின்கல வாகனங்களுக்கான சர்சார்ஜ் வரியை 18 சதவீதத்தில் இருந்து, 12 சதவீதமாகக் குறைக்க மத்திய அரசுக்கு நிச்சயம் அழுத்தம் தருவோம்.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறுவதாக இருந்தது. இந்தக் கூட்டம் பின்னர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் வரி குறைப்பு குறித்து வலியுறுத்தப்படும். இதுபோன்று வரி குறைக்கப்படும்போது பேட்டரி வாகனங்களுக்கான விலை எதிர்காலத்தில் குறைய வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தைப் பொருத்தவரை 69 பொருள்களுக்கு வரியை குறைக்கச் செய்துள்ளோம். மேலும் 8 சேவைகளுக்கு வரி குறைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் பல பொருட்களுக்கு ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அழுத்தம் அளித்த காரணத்தால் வரி குறைப்பும், வரி விலக்கும் அளிக்கப்பட்டது. இப்போது தமிழகத்தால் முன்மொழியப்பட்டு நீண்ட நாள்களாக நிலுவையில் உள்ள பல்வேறு பொருள்களுக்கு வரி குறைக்க அழுத்தம் தரப்படும்.
மத்திய அரசிடமிருந்து வர வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையைப் பொருத்தவரை, 2017-18-ஆம் ஆண்டுக்கு ரூ.386 கோடி தமிழகத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது. 2018-19-ஆம் ஆண்டுக்கான நிலுவைத் தொகை ரூ.552 கோடி நிச்சயம் வரும். ஒரு மாநிலத்திலிருந்து வேறு மாநிலத்தில் விற்பனை ஆகக்கூடிய பொருள்களுக்கான வரியைப் பொருத்தவரையில் (ஐ.ஜி.எஸ்.டி.) ரூ.4,500 கோடி வர வேண்டியுள்ளது.
தமிழகத்தில் நுண்ணுயிர் பாசனக் கருவிகளுக்கும், சிறப்புப் பொதுவிநியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பாமாயில் மற்றும் மண்ணெண்ணெய்க்கு வரிவிலக்கு அளிக்கவும், கோவையில் தயாரிக்கப்படும் இயந்திரங்களுக்கு 18 சதவீதமாக இருந்த வரியை 12 சதவீதமாகக் குறைத்ததை மேலும் குறைத்து 5 சதவீதமாக நிர்ணயிக்கவும்,
தோல் செருப்புகள் மீதான வரியைக் குறைப்பது, அதனோடு சேர்த்து பல்வேறு பொருள்களுக்கு வரிவிலக்கு மற்றும் வரி குறைக்க நீண்ட நாள்களாகப் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும், அடுத்த கூட்டத்தில் வலியுறுத்தப்படும் என்றார் அமைச்சர் டி.ஜெயக்குமார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை