மாந்தை மேற்கு வண்ணாகுளம் பிரதேசத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களின் வருமானத்தை ஈட்டுவதற்கு நடவடிக்கை!
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களின் நலன்களை கருத்திற்கொண்டு மாந்தை மேற்கு வண்ணாகுளம் பகுதியில் அமைக்கப்பட்ட ஆரோக்கியா உணவகம் மற்றும் கல்வி நிலையம் ஆகியன திறந்து வைக்கப்பட்டுள்ளன.
அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் பிரிஜிங் லங்கா நிறுவனத்தால் அமைக்கப்பட்ட குறித்த ஆரோக்கியா உணவகம் மற்றும் கல்வி நிலையம் ஆகியன, இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணியளவில் திறந்து வைக்கப்பட்டன.
குறித்த நிகழ்வில் இலங்கை மற்றும் மாலைதீவிற்கான அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் டேவிற் கோலி கலந்துகொண்டு இச்செயற்றிட்டங்களை, வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.
போரினால் கணவனை இழந்த பெண்கள், கைவிடப்பட்ட பெண்கள், வலுவிழந்த கணவர்களுடன் வாழும் பெண்கள் தொடர்ச்சியாக வருமானத்தை ஈட்டிக்கொள்ளும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வண்ணா குளத்தைச் சேர்ந்த பெண்களினால் குறித்த உணவகம் முகாமைத்துவம் செய்யப்படவுள்ளது.
இந்நிகழ்வில், மாந்தை பிரதேச சபை தலைவர், ப்ரிஜிங் லங்கா ஊழியர்கள், அதிகாரிகள் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை