ஜனாதிபதியுடனான சந்திப்புக்கு செல்லாமை தனி தேசியம் காரணமாம்- மாவை!!
தமிழ்தேசிய கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினா்கள் கொழும்பில் இல்லாமையினாலும் வேறு சில காரணங்களாலும் ஜனாதிபதியுடனான சந்திப்பில் கலந்து கொள்ள முடியவில்லை. என நாடாளுமன்ற உறுப்பினா் மாவை சேனாதிராசா கூறியுள்ளாா்.
கன்னியா பிள்ளையார் கோவில் விவகாரம் குறித்து ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தும் தமிழ் தேசிய கூட்டமைப் பினர் ஜனாதிபதியுடனான சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை.
இது குறித்து வினவியபோதே அவர் இதகை குறிப்பிட்டார். மேலும் கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் குறித்து கோடிஸ்வரன் எம்.பிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் அவரையும் கலந்துகொள்ள வேண்டாம் என கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா குறிப்பிடு கையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கியமான சில உறுப்பினர்கள் வெளிப் பிரதேசங்களில் உள்ள காரணத்தினாலும் வேறு சில முக்கிய காரணங்களுக்காகவும்
தாம் கலந்துகொள்ளவில்லை. இந்த சந்திப்பு நேற்று இடம்பெற்றது. ஆனால் நாம் கலந்துகொள்ள வில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மாத்திரம் ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த கோரிக்கை விடுத்துள்ளோம்.
அனேகமாக அடுத்த பாராளுமன்ற அமர்வுகளில் போது அல்லது அந்த வாரத்தில் ஏதேனும் ஒரு நாளில் நாம் ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புகள் உள்ளது. அதேபோல் கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் குறித்தும்
அமைச்சர் வஜிர அபேவர்தன மற்றும் கூட்டமைப்பின் கோடீஸ்வரன் எம்.பி ஆகியோரை சந்திக் கவும் ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் இது குறித்து இப்போது ஒரு தீர்மானம் எட் டப்பட்டுள்ளது. புதிய கணக்காய்வாளர் நியமிக்கப்பட்டுள்ள நிலையிலும்
முதற்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையிலும் ஜனாதிபதியை இப்போது சந்திக்க வேண்டிய அவசியம் இல்லையென நாம் நினைக்கின்றோம். ஆகவே கோடீஸ்வரன் எம்.பி இப்போது சந்திக்க தேவையில்லை என நம் கூறியுள்ளோம்.
அவரும் இந்த சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை