பருத்துறை மீனவா்கள்36 தென்னிலங்கை மீனவா்களை பிடித்து பொலிஸில் ஒப்படைத்தும் விடுதலையாக்கிய பொலிஸ்!!

வடமராட்சி கடற்பகுதியில் சட்டவிரோதமாக கடலட்டை பிடித்துக் கொண்டிருந்த 36 தென்னிலங்கை மீனவா்களை பருத்துறை முனை பகுதி மீனவா்கள் பிடித்து பொலிஸாாிடம் ஒப்படைத்த நிலையில் பொலிஸாா் அவா்களை விடுதலை செய்துள்ளனா்.


நீண்ட காலமாக குறித்த கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் தென்னிலங்கை மீனவர்கள் கடலட்டை பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டுவரும் நிலையில் அது தொடர்பில் உரிய தரப்புக்களுக்கு அறிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் ,

அதனால் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை தாமே கடலில் இறங்கி சட்டவிரோதமான முறையில் கடலட்டை பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டவர்களை பிடித்ததாகவும் அப்பகுதி மீனவர்கள் தெரிவித்தனர்.

குறிப்பாக 12 படகுகளில் சென்ற 36 பேரை பிடித்து காவற்துறையினரிடம் ஒப்படைத்த போதிலும், அவர்களை காவற்துறையினர் எச்சரித்து விடுவித்துள்ளனர் எனவும் தெரிவித்தனர். இனியும் சட்டவிரோத தொழிலில் ஈடுபடுவார்கள் ஆயின் தாம் பொறுத்துக்கொள்ளப் போவதில்லை

எனத் தெரிவித்த மீனவர்கள் உரிய தரப்பினர்கள் அது தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரியுள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.