'சாஹோ'.பட 'காதல் கிறுக்கோ' பாடல் வெளியானது!

சுஜீத் ரெட்டி இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள திரைப்படம் 'சாஹோ'. இந்தப் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக ஷ்ரத்தா கபூரும், முக்கிய வேடத்தில் அருண் விஜயும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை மதி ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசையமைத்து வருகிறார்.



தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி என நான்கு மொழிகளில் உருவாகி வரும் இந்தப் படம், வருகிற ஆகஸ்ட் 15 -ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. முழுக்க த்ரில்லர் ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள 'சாஹோ' திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்திலிருந்து 'காதல் கிறுக்கோ'  என்கிற பாடல் வெளியாகியுள்ளது. பார்ட்டி சாங்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த  பாடல் துள்ளல் இசையுடன் தலையசைக்க வைக்கும் பாடலாக அமைந்து ரசிகர்களை ஈர்த்துள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.