`என்ன சுவாமி... செளக்கியமா?'முதல் நாளே அசத்திய வைகோ!

தி.மு.க கூட்டணியில் மாநிலங்களவை உறுப்பினராக ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தேர்வாகியுள்ளார். வரும் ஜூலை 25-ம் தேதி, முறைப்படி அவர் பதவியேற்க உள்ள சூழலில்,`தேசத் துரோக குற்றச்சாட்டில் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரை எம்.பி ஆக்க அனுமதிக்கக்கூடாது' என்று அ.தி.மு.க எம்.பி, சசிகலா புஷ்பாவும், பி.ஜே.பி, மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

வைகோ
இந்நிலையில், 23 வருடங்களுக்குப் பிறகு, இன்று (ஜூலை 22-ம் தேதி) நாடாளுமன்ற வளாகத்திற்குச் சென்ற வைகோ, தேசப்பிதா மகாத்மா காந்தி, சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர், மறைந்த முன்னாள் தமிழக முதல்வர்கள் அறிஞர் அண்ணா, காமராஜர், எம்.ஜி.ஆர்., பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் ஆகியோரின் சிலைகளை வணங்கினார்.
எதேச்சையாக அவ்வழியே வந்த பி.ஜே.பி மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, வைகோவைக் கண்டவுடன் ஓடோடி வந்து வாழ்த்து தெரிவித்தார். பதிலுக்கு வைகோவும், ``என்ன சுவாமி செளக்கியமா? ரொம்ப வருஷம் ஆச்சு பார்த்து" என்று நலம் விசாரிக்க, சுவாமியின் முகத்தில் சிரிப்பு பூத்தது. சில நிமிடங்களே நடைபெற்ற இச்சந்திப்பில், இருவரும் நலம் விசாரித்துக்கொண்டு விடைபெற்றனர்.
வைகோவுடன் சுப்பிரமணியன் சுவாமி
வைகோவை தீவிரமாக எதிர்ப்பவரான சுப்பிரமணியன் சுவாமி, அவருக்கு நேரில் வாழ்த்து தெரிவித்திருப்பதும், தனது ட்விட்டர் பக்கத்தில் இச்சந்திப்பை சிலாகித்திருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் சந்தித்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo   

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.