பொருளாதார சரிவில் பயணிக்கிறது இந்தியா!

உலக வங்கி வெளியிட்டுள்ள 2018ஆம் ஆண்டுக்கான பொருளாதார நாடுகளின் பட்டியலில் இந்தியா பின்னோக்கி சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


குறித்த பட்டியிலின்படி 2017ஆம் ஆண்டு 5ஆம் இடத்தில் இருந்த இந்தியா 2018ஆம் ஆண்டு 7 இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பொருளாதார வல்லுநர்கள், அமெரிக்க டொலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிந்து வருவதே பொருளாதார மொத்த மதிப்பு சரிய காரணம் என தெரிவித்துள்ளனர்.

மேலும் நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சியானது 7 வீதமாக குறையும் என மதிப்பிடப்பட்டிருந்தாலும், வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளின் பட்டியலில் இந்தியா முக்கிய இடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

பொருளாதார ஆய்வு நிறுவனம் வெளியிட்ட கணிப்பின்படி, 2019 ஆம் ஆண்டில் இங்கிலாந்தை பின் தள்ளி உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா வரும் என்றும் 2025 ஆம் ஆண்டில் ஜப்பானை பின் தள்ளி மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா இடம்பிடிக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை 2018 பட்டியலின் படி பொருளாதாரத்தின் மொத்த மதிப்பாக 20.5 ட்ரில்லியன் டொலர்களை கொண்ட அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

13.6 ட்ரில்லியன் டொலர்களுடன் சீனா இரண்டாவது இடத்திலும், 5 ட்ரில்லியன் டொலர்களுடன் ஜப்பான் 3வது இடத்திலும் உள்ளமை  குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.