பெரஹெராவை முன்னிட்டு மதுபான சாலைகளுக்கு பூட்டு!!

கண்டி எசல பெரஹெராவை முன்னிட்டு மதுபான சாலைகளை மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


அந்தவகையில், கண்டி மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் உள்ள மதுபானசாலைகள் பூட்டப்படும் என இலங்கை மதுவரித் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கண்டி எசல பெரஹெரா இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகியுள்ள நிலையில், வரும் 5 ஆம் திகதியில் இருந்து 15 ஆம் திகதிவரை குறித்த பகுதிகளில் உள்ள மதுபானசாலைகள் மூடப்படவுள்ளன.

அதற்கமைய தலதா மாளிகையிலிருந்து 8 கிலோமீற்றர் தூரத்திற்குள் உள்ள அனைத்து மதுபான நிலையங்களும் மூடப்படும்.

பிரதானமாக கடவத்சர, கங்கவடகோரலய பிரதேச செயலக பிரிவு, பேராதனை, கட்டுகஸ்தொட, அலதெனிய, அம்பதென்ன, மடவல, மெணிக்ஹின்ன, திகன மற்றும் தலாத்துவோய ஆகிய பகுதிகளிலுள்ள மதுக் கடைகள் மூடப்படவுள்ளன.

இதேவேளை, குறித்த அறிவிப்புக்கு மீறி மது விற்பனைகளில் ஈடுபடுவோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மதுவரித் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.