சுற்றுலாப் பயணத் தட‍ையை தளர்த்தியது சிங்கப்பூர் அரசு!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை அடுத்து தமது நாட்டு பிரஜைகள் இலங்கைக்கு சுற்றுலா செல்வதை எச்சரித்து விடுத்திருந்த சுற்றுலாப் பயணத் தட‍ையை சிங்கப்பூர் அரசாங்கம் தளர்த்தியுள்ளது.


ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னர் இலங்கையில் பாதுகாப்பு பிரச்சினைகள் இல்லை என்பதனால் இலங்கை மீதான பயணத்தடை நீக்கியுள்ளதாக சிங்கப்பூர் அரசாங்கம் இன்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது.

இருப்பினும் தற்போது அங்கு அவசரகால சட்டம் அமுலில் இருப்பதனால் வழிபட்டு ஸ்தலங்கள், சுற்றுலாத் தளங்கள் மற்றும் விமான நிலையங்களில் முப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பயணிகள் போதுமான விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளது.

அத்தோடு ஏற்கனவே இலங்கையில் உள்ள சிங்கப்பூர் நாட்டவர்கள், விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர்கள் தங்கள் தனிப்பட்ட பாதுகாப்பிற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்குமாறும் சிங்கப்பூர் அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறும் சிங்கப்பூர் அரசாங்கம் தமது மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.