பூனைகளுக்கான அழகுப்போட்டி!

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் பூனைகளுக்கான அழகுப்போட்டி ஒன்று நடாத்தப்பட்டுள்ளது.


கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ள இந்த அழகுப்போட்டியில் ஸ்பெய்ன், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 12 பூனைகள் கலந்து கொண்டன.

அழகிய வண்ண உடைகளில் பூனைகள் எஜமானர்களின் கையில் அமர்ந்தபடி பார்வையாளர்களுக்கு காட்சிக்கொடுத்ததை பலரும் ஒளிப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

தெருக்களில் சுற்றித்திரியும் பூனை, நாய் உள்ளிட்ட விலங்குகளை மீட்டு அவற்றை தத்தெடுத்து வளர்க்கும் நோக்கில், குறித்த நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.