ஈழத்தமிழர் ஒருவர் கனடாவில் பிராந்திய பொலிஸ் தலைவராக பதவியேற்பு!!

கனேடிய பொலிஸ் சேவையில் பணிபுரிந்த ஈழத்தமிழரான நிஷாந்தன் துரையப்பா, Peel பிராந்திய காவல்துறையின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


நிஷாந்தன் துரையப்பா, யாழ். முன்னாள் மேயர் அல்பிரெய்ட் துரையப்பாவின் பேரன் ஆவார். தனது மூன்று வயதில் அவர் கனடாவுக்கு குடிபெயர்ந்திருந்தார்.

கனடாவின் ஹால்டன் பகுதியில் பொலிஸ் கான்ஸ்டபிளாக சேவையில் இணைந்துகொண்ட நிஷாந்தன் துரையப்பா, படிப்படியாக முன்னேறி ஹால்டன் பிரதி பொலிஸ் மாஅதிபராக 2015ம் ஆண்டு பதவி உயர்த்தப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தனது புதிய பொறுப்பை October மாதம் முதலாம் திகதி முதல் ஏற்கவுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.