நாளை வடக்கு கிழக்கு பிறீமியர் லீக் உதைபந்தாட்டம்!!

‘வடக்கு கிழக்கு பிறீமியர் லீக் உதைபந்தாட்டம் (NEPL)’ என்ற பருவகாலத் தொடர்  நாளை ஆரம்பமாகவுள்ளது.


தமிழர் உதைபந்தாட்டப் பேரவை மற்றும் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் 2019இற்கான இரண்டாவது பருவகாலத் தொடர் நாளை (திங்கட்கிழமை) ஆரம்பமாகவுள்ளது.

இந்தப்போட்டித் தொடருக்கான கிண்ண அறிமுகமும், சுற்றுப் போட்டி தொடர்பான விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடும் இன்று யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்றது.

இது தொடர்பாக இலங்கை உதைபந்தாட்ட சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜஸ்வர் உமர் தெரிவிக்கையில், “வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 12 கழகங்களை உள்ளடக்கியதாக இத்தொடர் நடைபெறவுள்ளதுடன், லீக் சுற்றுக்களாக 60 போட்டிகளும், 7 நொக்கவுட் போட்டிகளும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள 7 மைதானங்களில் நடைபெறவுள்ளன.

மேலும், இந்த தொடருக்கான பரிசுத்தொகையாக கிண்ணத்தினை வென்று சம்பியனாகும் அணிக்கு 50 இலட்சமும், இரண்டாம் இடம்பெறும் அணிக்கு 25 இலட்சமும், மூன்றாம் மற்றும் நான்காம் இடம்பெறும் அணிகளுக்கு முறையே 10 இலட்சம், 5 இலட்சமும் வழங்கப்படவுள்ளன.

அத்துடன், யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கைச் சேர்ந்த வீரர்கள் இந்தத் தொடர்களில் பங்குகொண்டு விளையாடுவதன் மூலம் தமது திறமைகளை சர்வதேச அளவில் வெளிக்கொணர முடியும்” என்று அவர் தெரிவித்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.