குருதி மாற்றியேற்றிய சம்பவம்- விசாரணை சி.ஐ.டி.வசம்!!
குருதி மாற்றியேற்றியதில் உயிரிழந்த 9 வயது சிறுவனின் மரணம் தொடர்பான வழக்கை கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சீ. றிஸ்வான் கட்டளையிட்டுள்ளார்.
குறித்த வழக்குடன் சம்பந்தப்பட்ட வைத்தியர்கள் உட்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் தவறியமையினாலேயே இந்த வழக்கை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்குமாறு நீதவான் இன்று (புதன்கிழமை) உத்தரவிட்டார்.
குறித்த சம்பவம் தொடர்பான வழக்கின் முன்னைய அமர்வில் எதிர்வரும் 7ஆம் திகதி சந்தேகநபர்களை ஆஜர்படுத்துமாறும் அதற்கான ஆவணங்களை சமர்பிக்குமாறும் உத்தரவிட்டிருந்த நீதவான், தவறும் பட்சத்தில் வழக்கு குற்றத் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்படும் என பொலிஸாருக்கு எச்சரித்திருந்தார்.
இந்நிலையிலேயே, இன்றும் சந்தேக நபர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படாதநிலையில் நீதவான் மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலை பலாச் சோலையைச் சேர்ந்த 9 வயது ஜெயக்காந்தன் விதுலஷ்சன் கடந்த மார்ச் முதலாம் திகதி இடம்பெற்ற வாகன விபத்தின் போது சிறிய காயங்களுடன் செங்கலடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இரத்தம் மாற்றி ஏற்றப்பட்டதால் மார்ச் 19ஆம் திகதி உயிரிழந்தார்.
இந்நிலையில் இதுகுறித்த வழக்கில், கடந்த ஜூலை 8ஆம் திகதி மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் வழக்கு எடுக்கப்பட்ட போது, சந்தேகநபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் கடந்த நான்கு மாதங்களாக பொலிஸார் தொடர்ந்தும் அவர்களை ஆஜர்படுத்தவில்லை.
இந்நிலையில், இன்று காலை இந்த வழக்கை நீதிமன்றில் எடுத்தபோது ஏற்கனவே கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்த இரு தாதியர்களும் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர். இருந்தபோதும் ஏனைய சந்தேகநபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தவில்லை.
இதனால், பொலிஸார் நீதிமன்ற நீதியை நிலைநாட்டவில்லை எனவும் இந்த வழக்கு விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் முன்னெடுத்தால் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு அநீதிநிலை ஏற்படும் என்றும், விசாரணையை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரியிடம் ஒப்படைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.
இந்த வழக்கின் சந்தேகநபர்களை கைது செய்யாததன் காரணம் ஏன் என்பது தொடர்பாக இந்த விசாரணையை பொறுப்பெடுத்த குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரியிடம் விசாரணையை மேற்கொள்ளுமாறும் பொலிஸாருக்கு கட்டளையிட்டு இந்த வழக்கை எதிர்வரும் செட்டெம்பர் 4ஆம் திகதி நீதவான் ஒத்திவைத்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

கருத்துகள் இல்லை